Oviyakalai – ஓவியக்கலை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

ஓவியக்கலை – Oviyakalai

TNPSC Tamil Notes - Oviyakalai - ஓவியக்கலை

Group 4 Exams – Details

 • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
 • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தம் உயரந்த கலை ஓவியக்கலை, ஓவியம் பேசும் செய்திகள் பல. உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல
 • தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஒவியக்கலை முன்னணியில் நிற்கிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் கீறி எழுதினர்.
 • தன் எண்ணத்தை சித்திரம் வரைந்து வெளிப்படுத்தினர். இவற்றை தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்து கொள்ள முடிகிறது.
 • கி,மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த்தனர். அவர்கள் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
 • தமிழகத்தில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியனவற்றைக் குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 • ஒவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அவ்வரைக்கோடுகள் சிவப்பு, கருப்பு, நீலம் முதலிய வண்ணங்கள் பூச அழகிய ஒவியங்களாக உருவெடுக்கும்.
 • தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. நாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொரள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
 • சீன மொழியிலும் எழுத்துக்கள் உருவங்களாக உள்ளன. எனவே பழங்கால மக்கள் சித்திர எழுத்துக்களால் கருத்துகளை புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.
 • தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்ததது.
 • ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படடம், படாம், வாட்டிகை செய்தி எனப் பலபெயர்களால் வழங்கப் பெற்றது.
 • ஓவியக்கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞர், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி ல்லலோன் என அழைக்கப்பட்டார்.
 • நச்சினார்க்கினியர் தம் உறையில் ஓவியருக்கு, நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுவத்துவோர் என்று கூறுகிறார். ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றப்புலமை பெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார். ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்.
 • தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்த பார்த்த பின்னரே அவ்வோவியத்தைக் கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்நது நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்ததனையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததனையும் உணர முடிகின்றது.
 • ஆண் ஓவியர் “சித்தராங்கதன்” எனவும், பெண் ஓவியர் “சித்திரசேனா” எனவும் பெயர் பெற்றிருந்தனர்
 • ஆடல் மகள் மாதவி, ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் சுற்றுத்துறை போக பொற்றொடி மடந்தையாக இருந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது.
 • வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிடப்பட்டிருந்தனர்.
 • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என வழங்கப்பட்டன. இறைநடனம் புரிவதற்கே சித்திர சபை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
 • புறநானூற்றில் ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார். வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைதற்கு புனையா ஓவியம் என்றழைத்தனர்.
 • கி.பி. 7-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் கலையார்வம் மிக்கவன், மகேந்திரவர்மன் காலத்தில் ஓவியக்கலை எழுச்சியுற்று உயர்நிலையை எட்டியது. இம்மன்னனே சிறந்த ஓவியனாகப் புகழ் பெற்றிருந்தான். கல்வெட்டுகள் இம்மனன்னைச் சித்திரகாரப் புலி எனப் புகழ்கின்றன. தட்சண சித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

சித்தன்னவாசல் ஓவியம்

 • சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் கண்டு மகிழலாம். அவற்றிலுள்ள  கவின்மிகு கயிலைக்காட்சி கண்களுக்கு விருந்தளிப்பன.
 • சேரமான் சுந்தர் கயிலை செல்லும் காட்சி, சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி, சுந்தரரைத் தடுத்தாளும் கோலம், நாட்டிய மகளிர், மாமன்னன் இராசராசன், கருவூர்த் தேவர் முதலிய ஓவியங்கள் வரலாற்று சிறப்பை உணர்த்துவன.
 • திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி முதலிய பல இடங்களில் விசயநகர நாயக்க மன்னர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
 • கி.பி. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஒவியக்கலை நன்கு வளர்ச்சிப் பெற்றது. ஓலைகளிலும், கண்ணாடிகளிலும், தந்தங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. வண்ணங்களின் வனப்புக்கேற்ப இரத்தினங்கள் பதிக்கப் பெற்றன. ஓவியர்களின் கைவண்ணங்களை இன்றும் கோவில் கூரைகளிலும், சுவர்களிலும், மரச்சிற்பங்களிலும் காணலாம்.
 • 2000 ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வரும் கலையாக ஓவியக்கலை உள்ளது. தமிழர் ஓவிய மரபு காலம் பல கடந்து எதிர்காலத் தலைமுறையினரான உங்கள் கையிலும் தவழ்ந்துக் கொண்டிருக்கின்றது.
 • பல்லவர் கால ஒவியங்கள் பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோயில், மாமண்டூர், காசஞ்சிக் கைலாசநாதர் கோயில் முதலிய இடங்களில் ஒவியங்கள் சிதைந்த தோற்த்தோடு காணப்படுகின்றன. பார்வதி உருவம், கின்னரர், கின்னரி, கந்தர்வர் ஓவியங்கள் காண்போரை மயக்குவன.
 • திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னம் குகைக்கோயில் ஓவியங்கள் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தக்கன.
 • கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டி மன்னன் காலத்தில் மதுரை ஆசிரியர் இளம் கெளதமன் இவ்வோவியங்களை வரைந்தார் என்று கல்வெட்டுச் செய்தி அறிவிக்கின்றது. அங்குள்ள தாமரைத் தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்ணைக் கவர்வன.
 • சோழர் கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரிய கோவிலில் கண்டு மகிழலாம். அதிலுள்ள கவின்மிகு கயிலைக்காட்சி கண்களுக்கு விருந்தளிப்பன.
 • சேரமான், சுந்தரர் கயிலை செல்லும் காட்சி, சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி, சுந்தரரைத் தடுத்தாளும் கோலம், நாட்டிய மகளிர், மாமன்னன் இராசராசன், கருவூர்த்தேவர் முதலிய ஓவியங்கள் வரலாற்றுச் சிறப்பை உணர்த்துவன.
 • கி.பி. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஒவியக்கலை நன்கு வளர்ச்சிப் பெற்றது.

மேற்கோள்

இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் – பரிபாடல்

புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – நெடுநல்வாடை

புனையா ஓவியம் புறம் போந்தன்ன – மணிமேகலை

வேறுபெயர்கள்

ஓவியம் ஓவு, ஓவியம், ஓவம், சித்தி ரம், படம், படாம் ,
ஓவியம் வரைபவர் கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்
ஓவியக் கூடம் எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை

எஸ்.வையாபுரிப்பிள்ளை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment