T.P.Meenakshi Sundaranar – தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் – T.P.Meenakshi Sundaranar

TNPSC Tamil Notes - T.P.Meenakshi Sundaranar - தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்

Group 4 Exams – Details

பெயர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
காலம் 1901- 1980
பிறப்பு சிந்தாதரிப்பேட்டை – சென்னை
புனைப்பெயர் தெ.பொ.மீ
விருதுகள் கலைமாமணி, பத்மபூசன்
  • தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் 08.01.1901-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார். இவருடைய தந்தை பொன்னுசாமி கிராமணி
  • 1920-ல் பி.ஏ., 1922-ல் பி.எல்., 1924-ல் எம்.ஏ., (வரலாறு) பெற்றார். மேலும் எம்.ஓ.எல்., பட்டம் பெற்றார். தமிழ் வித்துவான் தேர்வுக்குரிய முன்னிலைத் தேர்வு இறுதித் தேர்வு இரண்டையும் ஒரு சேர எழுதி மாநிலத்தின் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
  • 1923-ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறினார்.
  • நாட்டு விடுதலைக்காகக் போராடி 1944-ல் சிறை சென்றார்.
  • 1916-ல் அரிஜனங்களுக்கு இரவுப் பள்ளிளக்கூடம் நடத்தினார்.
  • 1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவர்.
  • 1936-ல் வேதாந்த சங்கத் தலைவர்
  • 1947-ல் மாண்டிச்சோரி பள்ளியை நிறுவினார்.
  • 1944-1946 அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் பேராசிரியர். 1958-ல் துறைத் தலைவர்
  • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார் (Centre of Advanced Study in Linguistics)
  • 1961-ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கல்வி தொடங்கியபோது அங்குத் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.
  • 1973-74 திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியன் சிறப்பாய்வாளராகப் பணியாற்றினார்.
  • 1967-ல் பத்மபூஷன் விருதும், 1978 கலைமாமணி பட்டமும் பெற்றார்.
  • அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தை தொடங்கியர்.
  • தமிழ் மொழியியல் முதல் தலைவராகவும், தன் இறுதிக் காலம் வரை அதன் தலைவராக இருந்தார்.

புகழ்

  • நடமாடும் பல்கலைக்கழம் – திரு.வி.க
  • பன்மொழிப் புலவர் (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்ச, ஜெர்மன்)

தமிழ் நூல்கள்

வள்ளுவரும் மகளிரும் அன்பு முடி
கால்டுவெல் ஒப்பிலக்கணம் – அடிச்சொற்கள் (மொழிபெயர்ப்பு) மனோ தத்துவ சாத்திரம் தமிழா நினைத்துப்பார்
நீங்களும் சுவையுங்கள் வள்ளுவர் கண்ட நாடும் காமமும்
பிறந்தது எப்படியோ? கானல்வரி
சமணத்தமிழ் இலக்கிய வரலாறு கல்விச் சிந்தனைகள்
தமிழ்மணம் தமிழும் பிற பண்பாடும்
வாழும் கலை தமிழ் மொழி வரலாறு
மொழியியல் விளையாட்டுகள் பத்துப்பாட்டு ஆய்வு

ஆங்கில நூல்கள்

A History of Tamil Language A History of Tamil Literature
Philosophy of Tiruvalluvar Advaita in Tamil
Tamil – A Bird’s Eye View

பெற்ற பட்டங்கள்

பல்கலைச் செல்வர் திருவாவடுதுறை ஆதீனம்
பன்மொழிப்புலவர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் (அழகப்ப செட்டியார் தலைமை)
பெருந்தமிழ் மணி சிவபுரி சன்மார்க சபை (முதலமைச்சர் காமராஜர் தலைமை)

உ.வே.சாமிநாத ஐயர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment