பாஞ்சாலி சபதம் – Panjali Sabatham
Group 4 Exams – Details
நூல் | பாஞ்சாலி சபதம் |
ஆசிரியர் | பாரதியார் |
பாடல்களின் எண்ணிக்கை | 2பாகங்கள், 5 சருக்கங்கள், 412 பாடல்கள் |
பா வகை | சிந்து |
நூற்குறிப்பு
- “முப்பெரும் பாடல்கள்” எனப்படும் மூன்றில் ஒன்று
- சிந்து என்னும் பாவகையில் எளிய தமிழ்நடையினை கொண்டது.
- இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரத பேராகவும், பாஞ்சாலியை பாரதத்த தேவியாகவும் உருவகப்படுத்தி படைக்கப்பட்ட நூல்
- பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களை கொண்டது. ஐந்து சருக்கங்கள், 412 பாடல்கள் உள்ளன.
- முதல் பாகத்தில் சூழ்ச்சிக் சருக்கம், சூதாட்டச் சருக்கம் என இரு சருக்கங்கள் உள்ளன.
- இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகில் உரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என மூன்று சருக்கங்கள் உள்ளன.
- பாஞ்சாலி சபதம் 1919-லேயே பாரதி எழுதி முடித்துவிட்டார் என்பது 05.09.1919-ல் பாரதியார் வயி.ச.சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
- பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் 1912-ல் பாரதி வாழந்த காலத்திலேயே வெளிவந்தது.
- 1924-ல் முழு நூலையும் பாரதி பிரசுராலயம் வெளியிடப்பட்டது.
மேற்கோள்
பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும்நாடு – விதுரன் கூற்று |
“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் எனும் இயற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்” -அர்சூனன் கூற்று |
- பாரதியார் ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதினார்.
- நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியகவி, மகாகவி என்று போற்றப்படுகிறார்
“பாட்டுக் ஒரு புலவன் பாரதியடா – அவன் பாட்டை பண்ணோடு ஒருவன் பாடினானடா கேட்டுக் கிறுகிறுத்தப் போனேனடா – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பையடா” – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை |
- பாதியார் பாஞ்சாலி சபதத்தை, தமிழ் மொழிக்கு அழியாத உயிரும், ஒளியும் இயலுமாறு இனிப்பிறந்த காவியங்கள் செய்யப் போகின்ற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகின்ற பிரபுக்களுக்கும் இந்நூல் பாத காணிக்கையாக செலுத்துகின்றேன்” என்று சமர்ப்பணம் செய்துள்ளார்.
- எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு உயிர் தருவோன் ஆகின்றான்” – பாரதி எழுதிய முகவுரைப்பகுதி.
- வட மொழியில் வியாசர் எழுதிய மகாபாரதக் கதையில் பரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் சூளுரையை மையமாகக் கொண்ட பாரதியார் படைத்ததுதான் பாஞ்சாலி சபதமாகும்.
- பாஞ்சாலி சபதம் முழுவதும் சிந்த என்ற பாவகையைச் சார்ந்தது
- சிந்து : இசைபாட்டிற்குரிய சரணங்களின் கண்ணிகளை மட்டும் கொண்டது. இது பாடப்படும் இடம் நோக்கி காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து என்று அழைக்கப்படும்.
- பாஞ்சாலி சபதம் முழுவதும் நொண்டிச்சிந்து என்ற பாவகையைச் சார்ந்தது