பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர் தமிழிலும் வட மொழியிலும் புலமை பெற்றவர். இவரின் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர்.
பரஞ்சோதி முனிவர் துறவியாகிச் சிவாலயங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். அவ்வாறு மதுரை நகரினை அடைந்து மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர். அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார். அந்நகரத்தார் அவரைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அந்நூலைச் சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறநூல் பீடத்தில் இருந்து வடமொழி, தேன்மொழிப்புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
இவர் திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.