பரிமாற் கலைஞர் – Parithimar Kalaignar
Group 4 Exams – Details
அறிஞர் | பரிமாற்கலைஞர் |
இயற்பெயர் | வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் |
காலம் | 1870 – 1903 |
- தமிழகம் உரிமை இழந்து ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் அருந்தமிழை போற்றி வளர்த்த அறிஞருள் ஒருவர் பதிரிமாற் கலைஞர்.
- இவரது காலம் 1870 – 1903
- சூரியநாராயண சாஸ்திரி எனும் தம்பெயரை தூயதமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார்.
- சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை தேர்விலும் தத்துவத்திலும் பல்கலைகழகத்தில் முதல் மாணவராய்த் தேர்ச்சி பெற்றார்.
- பின் தான் பயின்ற கல்லூரியிலே தமிழ்பேராசிரியராய் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
- செம்மாந்த சீரிய செந்தமிழ் நடையில் நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார்.
- இவரது நாடகங்கள் “ரூபாவதி, கலாவதி, மானவிஜயம்” ஆகும்.
- வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரேபாடு இணைத்து நாடகவியல் என்னும் நூலைப்படைத்தார். இந்நூலை செய்யுள் வடிவில் இயற்றினார். இந்நூலில் நாடகம், அதன் விளக்கம் வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
- “மானவிஜயம்” என்னம் நாடகம் “களவழி நாற்பது” என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.
- “தமிழ்நாடக பேராசிரியர்” என்று அழைக்கப்படுபவர் பரிதிமாற்கலைஞர் ஆவார்.
- பரிதிமாற் கலைஞரின் ஒவ்வொரு் செயலும் தமிழ் வளர்ச்சியை நோக்கியே அமைந்திருந்தது.
- மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
- பாஸ்கர சேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
- சி.வை.தாமோதரனார் பரிதிமாற்கலைஞரின் தமிழ் புலமையையும், கவிபாடும் திறனையும் கண்டு “திராவிட சாஸ்திரி” என்று பட்டம் வழங்கினார்.
- தான் இயற்றிய தனிப்பாசுரத் தொகை என்னும் நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- “மு.சி.பூர்ணலிங்கம்” தொடங்கி வைத்த “ஞானபோதினி” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
- பரிதிமாற் கலைஞர் “சித்திரக்கவி” என்னும்நூலை எழுதினார்.
- 1901-ம் ஆண்டு மதுரைத் தமிழ்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற்கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
- இதன் மூலம் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என நிலைநாட்டப்பட்டது.
Related Links
Group 4 Model Questions – Download