பசும்பொன் – Pasumpon
பெயர் | பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் |
காலம் | 1908-1963 |
பிறப்பு | இராமநாதபுரம் மாவட்டம் – பசும்பொன் |
பெற்றோர் | உக்கிரபாண்டித்தேவர் – இந்திராணி அம்மையார் |
சிறப்பு பெயர் | தேசியம் காத்த செம்மல் |
- தேசியம் காத்த செம்மல் என அழைக்கப்படும் முத்துராமலிங்கத்தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் பிற்ந்தார். இவர் இளம் வயதில் தாயை இழந்தார்.
- பின் இசுலாமியப் பெண்மணி ஒருவர் தாயாகி, பாலுட்டி வளர்த்தார். பாட்டியின் வீட்டில் வளர்ந்த நாள்களில் இவருக்கு கற்பித்த ஆசிரியர் “குறைவர வாசித்தான் பிள்ளை” ஆவார். பின்பு கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கிறித்துவப் பாதிரியார்களிடம் பயின்றார். பசுமலை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் பயின்றார். ஐக்கிய கிறிஸ்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயிர்நிலைப்பள்ளியல் 10-ம் வகுப்பு படித்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகியவையும் கற்றறிந்தார்.
- 32 சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். நிலக்கிழார் ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம் சமபந்தி முறையை ஊக்குவித்தார். இவரது விருப்பத்திற்கு இணங்க 06.09.1939-ல் மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்தார். “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை. ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர சாதியையும், நிறத்தையும் அல்ல. சாதியும், நிறமும் அரசியலுக்குமில்லை, ஆன்மீகத்திற்கு இல்லை” என்றார் பசும்பொன்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைத் தம் அரசியல் வழிகாட்டியாகக் கொண்டார். ஆங்கில அரசு, வட இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் முத்துராமலிங்கத் தேவருக்கும் “வாய்ப்பூட்டுச் சட்டம்” போட்டது.
- “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க இவரைப் பாராட்டியுள்ளார்.
- திருமண வாழ்வினைத் தவிர்த்தார். ஐந்து முறை தேர்தல்களில் வெற்றி வாகை சூடினார். (1937, 1946, 1952, 1957, 1962) தெய்வீகம் தேசியம் ஆகிய இரண்டையும் இரு கண்களாய் போற்றியவர்.
- சமயச் சான்றோரான வேதாந்த பாஸ்கர் பிரணவ கேசரி சன்மார்க்க சண்டமாருதம், இந்து சயம புத்த மேதை விவேகானந்தரின் தூதர், நேதாஜியின் தளபதி, சத்திய சீலர், முருக பக்தர், ஆன்மீகப் புத்திரர், தமிழ்பாடும் சித்தர், தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னர், நீதி வழுவா நேர்மையாளர். புலமையில் கபிலர், வலிமையில் கரிகாலன், கொடையில் கர்ணர், பக்தியில் பரமஹம்சர், இந்தியத் தாயின் நன்மகன்.
- “பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுகிறார்.
- “வீரமில்லா வாழ்வும், விவேகமில்லா வீரமும் வீணாகும்” என்பது அவரது மேற்கோள் ஆகும்.
சிறப்பு பெயர்கள்
- தேசியம் காத்த செம்மல்
- வித்யா பாஸ்கர்
- பிரவசன கேசரி
- சன்மார்க்க சண்டமாருதம்
- இந்து புத்தசமய மேதை.
Related Links
Group 4 Model Questions – Download