Pathupattu – பத்துப்பாட்டு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பத்துப்பாட்டு – Pathupattu

TNPSC Tamil Notes - pathupattu - பத்துப்பாட்டு

Group 4 Exams – Details

நூல் பாடல் அளவு பொருள் பாடியவர் பாட்டுடைத் தலைவன்
திருமுருகாற்றுப்படை 317 புறம் நக்கீரர் முருகன்
பொருநாராற்றுப்படை 248 புறம் நல்லூர் நத்தத்னாார் கரிகால் பெருவளத்தான்
சிறுபாணற்றுப்படை 269 புறம் முடத்தாமக் கண்ணியார் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்
பெருபாணற்றுப்படை 500 புறம் கடியலூர் உருத்தரங்கண்ணணார் தொண்டைமான் இளந்திரையன்
முல்லைப்பாட்டு 103 அகம் காவிரிப் பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகனார் – நப்பூதனார் நெடுஞ்செழியன்
மதுரைக்காஞ்சி 782 புறம் மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
நெடுநெல்வாடை 188 அகம் (அ) புறம் நக்கீரர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்
குறிஞ்சிப்பாட்டு 261 அகம் கபிலர் பிரகத்தன், தமிழ்
பட்டினப்பாலை 301 அகம் கடியலூர் உருத்தரங்கண்ணணார் கரிகாலன்
மலைபடுகடாம் 583 புறம் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார் செங்கன் மாத்துவேன் நன்னன் சேய் நன்னன்
நூல்கள் வேறுபெயர்கள்
1.சிறுபாணற்றுப்படை புலவராற்றுப்படை
2. பெருபாணற்றுப்படை பாணாறு
3. முல்லைப்பாட்டு நெஞ்சாற்றுப்படை
4. குறிஞ்சிப்பாட்டு பெருங்குறஞ்சி
5. பட்டினப்பாலை வஞ்சிநெடும்பாட்டு
6. மலைபடுகடாம் கூத்தாராற்றுப்படை

பத்துப்பாட்டின் வகைகள்

இஃது அகவற்பாக்களில் அமைந்த பத்துப்பாடல்களின் தொகுப்பாகும். பத்தப்பாட்டு இவை இவை என ஒரு வெண்பா கூறுகிறது.

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினபட

பாலை கடாத்தொடும் பத்து

  • இவற்றுள் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றப்படை, பெரம்பாணாற்றுப்படை, பொருநாராற்றுப்படை, மலைபடுகடாம் (அ) கூத்தாராற்றுப்படை என்பவை ஐந்தும் ஆற்றுப்படை வகையைச் சேர்ந்தவையாகும்.
  • பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றியனவாகும்.
  • மதுரைக்காஞ்சி புறப்பொருள் (நிலையானம்) பற்றிக் கூறுவதால் புற நூலாகும்.
  • நெடுநெல்வாடை என்னும் நூல் அகப்பொரள் செய்தியை கூறினும் பாண்டிய மன்னன் பூவாகிய வேப்பம்பூவைப் பற்றி ஓரிடத்தில் வருவதால் இஃது பாண்டிற்குரியது என கணித்து, இது புறம்பொருள் நூல் எனக் கூறுவாரும் உளர். இந்நூல் அகநூலா?புறநூலா? என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பிற செய்திகள்

  • பத்தப்பாட்டு நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை வகுத்துள்ளார்.
  • எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சேர்ந்த சங்க இலக்கிய பாட்டுகளின் எண்ணிக்கை 2381 ஆகும்.
  • அகநானூறும், ஐங்குறுநூறும், தொகுத்தோன், தொகுப்பித்தோன் பற்றிய முழு வரலாறு அமையப் பெற்ற நூல்களாகும்.
  • பரிபாடலும், கலித்தொகையும் பா வகையால் பெயர் பெற்ற நூலாகும்.
  • உவமையணி என்பதைச் சங்க இலக்கியம் உயிர்நாடியாகக் கொண்டுள்ளது.
  • ஆற்றுபடைகளில் சிறப்பாக வர்ணிக்கப்படும் இசைக்கருவி – யாழ்
  • திருமுருகாற்றுப்படை 11வது திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
  • ஒன்றன் கூறாடை உடுப்பவரேயாயினும் ஒன்றினார் வாழ்வே வாழ்வு என்று கூறும் நூல் – கலித்தொகை
  • சங்க இலக்கியத்தில் அதிக பாடல் பாடியவர் – கபிலர்
  • பத்துப்பாட்டில் இலக்கிய சுவை மிகுந்தது – நெடுநல்வாடை
  • குறிஞ்சிப்பாட்டு இதில் செங்காந்தள் பூ முதலாக என்னும் மலை எடுக்கப் ஈறாக 99 பூக்கள் பற்றி கூறப்பட்டுள்ளன.
  • கடையெழு வள்ளல்களை பற்றி கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
  • கற்பு ஒழுக்கம் – குறிஞ்சிப்பாட்டு

மேற்கோள்

புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – நெடுநல்வாடை

 திரிகடுகம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment