பழமொழி நானூறு
நூற்குறிப்பு
- மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தை சுருக்கமாக கூறியதே பழமொழியாகும்.
- பழமொழியை மூதுரை, முதுமொழி, உலக வசனம் எனவும் கூறுவர்.
- ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம்பெறுமாறு பாடப்பெற்ற 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் பழமொழி. இதனைப் பழமொழி நானூறு எனவும் குறிப்பிடுவர்.
- 34 அதிகாரம், 400 பாடல்கள்
ஆசிரியர் குறிப்பு
- பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இவர் சமண சமயத்தை சார்ந்தவர்
- “அரையன்” என்பது அரசரைக் குறிக்கும் சொல். இவர் பாண்டிய நாட்டு முன்றுரை என்னும் ஊரை ஆட்சிபுரிந்த சிற்றரசர் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.
- இவர் வாழ்ந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுகள்
- வேறுபெயர் – “முதுசொல்”
பா வகை
- பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும். அதிகாரங்களில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
சிறந்த தொடர்கள்
- பாம்பறியும் பாம்பின் கால்
- முள்ளினால் முள் களையுறுமாறு
- இறைத்தோறும் ஊறுங்கிணறு
- ஆயிரங் காக்கைக் கோர்கல்
- திங்களை நாய் குரைத்தன்று
- கற்றலின் கேட்டலே நன்று
- குலவிச்சை கல்லாமல் பாகம் படும்
- குன்றின் மேலிட்ட விளக்கு
- நுணலும் தன்வாயால் கெடும்
முறைக்கு மூப்பு இளமை இல் (கரிகால்)
Related Links
Group 4 Model Questions – Download