பேச்சுக்கலை – PechuKalai
Group 4 Exams – Details
- ஆயக்கலைகள் 64 என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக் கலைகளும் ஒன்று. இது நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை.
- மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தாேர் தமிழ்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர் ஆவர்.
- வெறும் பேச்சுக்கும், மேடைப்பேச்சுக்கும் வேறுபாடு உண்டு. பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது. ஆனால் மேடைப்பேச்சிலோ உணர்ந்ததை உணர்த்தும் வகை தெரிவித்தல் வேண்டும். மேடைபேச்சுக்கு கருத்துக்களே உயிர்நாடி என்றாலும் அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும், முறையும் இன்றிமையா இடத்தை பெறுகின்றன. பேச்சாளரின் நெஞ்சிலே உள்ள கருத்து கேட்பவர்கள் நெஞ்களிலே பாய்தல் வேண்டும். பேசும் மொழி அழகிய செஞ்சொற்களால் இனியமையாகவும், எளிமையாகவும், நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்த மொழி நடை.
- பேசும் பொழுது அவையில் இருப்போரை விளித்துச் சுருக்கமான முன்னுரையுடன் பேசத் தொடங்குவதே சிறப்புடையது. பேசத் தொடங்கிய ஓரிரு மணித்துளிகளில் பேசப்போகும் பொருளில் புகுந்து விடுவது பாராட்டுக்குரியது. இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.
- தாம் பேச எடுத்துக் கொண்ட செய்தியின் நுட்பங்களையும், கருத்துகளையும் பல தலைப்புகளின் கீழ் வரிசைப்படுத்தி, ஓர் ஓவியன் பல வண்ணம் தீட்டி இயற்கை வனப்பை உருவாகி காட்டுதல் போலப் பேசுதலே ஒரு பேச்சாளரின் கடமையாகும். பேச்சின் இடையே கேட்போர் சுவைக்கத்தக்க, உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு வகையான நடைகள், சிறுசிறு கதைகள் முதலிய அமையப் பேசுவதே சிறந்த பேச்சாகும்.
- உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும். அப்பேச்சே கேட்போர் உள்ளத்தில் ஊடுருவிச் சென்று கேட்வர்களுடைய உள்ளத்தை பிணிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அமையும். பேச்சைத் தொடங்குவதிலும் பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும். பேச்சின் சுருக்கத்தை கூறி முடித்தல், உணர்ச்சியை தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.
Related Links
Group 4 Model Questions – Download