பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்- Pen Eluthalargalin Sirukathaigal
Group 4 Exams – Details
- பெண்களின் சிக்கல்களை 1970களுக்குப்பிறகு நேரடியாகப் பெண்களே பேசக் களத்தில் இறங்கினார்.
- அதன் விளைவாக பெண்களின் வாழ்வியில் சிக்கல்கள் உலக அரங்கில் உள்ளது உள்ளபடி அரங்கேற்றத் தொடங்கின.
இராஜம் கிருஷ்ணன்
- 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் படைத்துள்ளார். பெண்களின் ஆளுமையை நிலைநாட்டுபவர்.
- பெண்களின் கோணத்தில் செய்திகளை ஆராய்வார். காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை கோபமாக வெளிக்கொணர வல்லவர்
பெற்றுள்ள விருதுகள்
|
அம்பை
- பெண்களின் சிக்கல்களை ஆழமாக பதிவு செய்பவர்.
- வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்னும் சிறுகதை பெண்ணின் வாழ்விடமும் கூட வீட்டின் மூலையில் வரையறக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறது.
- மல்லுகட்டும் சிறப்பான கதை
- “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதை நூலுக்கு 2021-ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது
சூடாமணி
- உள்ளத்தின் உணர்வுகளை உள்ளபடி புலப்படுத்த வல்லவர்.
- கதைகள் தெறிப்பாக இருக்கும்.
- ஒளியின் முன் இவரது தொகுப்பு, இணைப்பறவை, பூமாலை, அந்நியர்கள் ஆகியவை இவரது சிறப்புமிக்க சிறுகதைகள்.
அனுராதா ரமணன்
- நடையின் ஈர்ப்பால் கதையின் வேகத்தை கூட்டுபவர்
- பெண்களின் சிக்கல்களை மிக அழகாக வெளிப்படுத்த வல்லவர்.
- காலச்சுமை தாங்கி சிறப்பான சிறுகதை.
திலகவதி
- பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளைப் பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்னும் எண்ணத்தினர்.
- குடிசையில் வாழுகின்ற இளம்பெண் நாகு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து காளியாக உருவெடுப்பதை காளி என்னும் சிறுகதை சித்தரிக்கிறது.
ஆண்டாள் பிரியதர்ஷினி
- சுருதி பிசகாத வீணை, வானவில் வாழ்க்கை, தோணம், சரஸ்வதியின் சிலுவை, ரிஷியும் மனுஷியும், கதாநாயகி ஆகியை ஆண்டாள் பிரியதர்ஷினியின் படைப்புகள் ஆகும்.
Related Links
Group 4 Model Questions – Download