பெரியபுராணம்
நூற்குறிப்பு
- தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக ஏழுபத்திருவர் சிவனடியார் ஆவர். அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம் எனும் பெயர் பெற்றது.
- இந்நூலுக்கு சேக்கிழார் இடம் பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது. தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்டதெனவும் கூறுவர்.
- இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வமணம் கமழும் தன்மையுடையன. எனவே தான், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார், பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என சேக்கிழார் பெருமானை புகழந்துரைத்துள்ளார்.
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் என்பார் திரு.வி.கல்யாண சுந்தரனார்.
சேக்கிழார்
- பெரிய புராணத்தை அருளியவர் சேக்கிழார்.
- இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தவர்.
- இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
- அநபாயச் சோழனிடம் தலைமை அமைச்சராய் திகழ்ந்தவர்
- உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
- இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் போற்றுவர்.
- இவரது காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டு
- சொற்கோயில் எழுப்பிய இவர், கற்கோயிலும் எழுப்பினார்
அப்பூதியடிகள் புராணம்
- அப்பூதியடிகள் திங்களூரில் பிறந்தவர்
- திருநாவுக்கரசரிடம் பேரன்பு கொண்ட இவர் தம் பிள்ளைகளுக்கும் தண்ணீர் பந்தல், பசு, அளவை, நிறைகோல் போன்றவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றே பெயரிட்டு அழைத்தவர்.
- தன் இல்லம் வந்த திருநாவுக்கரசுக்கு அமுது படைக்கும் பொருட்ட தன் மகன் முத்து திருநாவுக்கரசை வாழை இலை அரியச் சொல்ல, அரவம் தீண்டி மகன் இறக்க, செய்தி அறிந்த திருநாவுக்கரசர் “ஒன்று கொலாம்” எனும் திருப்பதிகம்பாடி இறந்துபட்ட பிள்ளையை உயிருடன் எழுப்பினார்.
நிறைகோல் | தராசு |
ஆ | பசு |
மேதி | எருமை |
தண்ணளித்தாய் | குளிர்ச்சி அடைந்த |
தடம் | தடாகம் |
பந்தர் | பந்தல் என்பதன் கடைப்போலி |
மந்தமாருதசீதம் | குளிர்ந்த இளந்தென்றல் காற்றுடன் கூடிய குளிர்ந்த நீர் |
ஈறு | எல்லை |
மிசை | மேல் |
கரகமலை | உருவம் |
மல்லர் | வளமான |
அம் | அழகிய |
அரா | பாம்பு |
அங்கை | உள்ளங்கை |
பூதி | திருநீறு |
அங்கணர் | அழகிய நெற்றிக் கண்ணை உடைய சிவன் |
விதிர்ப்புற்றஞ்சி | விதிர்ப்பு + உற்று + அஞ்சி |
பணிவிடம் | பாம்பின் நஞ்சு |
பாற்றுவித்தார் | போக்குவித்தார் |
உரையார் = உரை + ய் + (ஆ) + ஆர்
|
மேற்கோள்
8ஆம் வகுப்பு 2 ஆம் பருவம்சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி திமிலை பற்றிய குறிப்பு |
Its really very useful tq