பெருந்தலைவர் – Perunthalaivar

பெயர் |
பெருந்தலைவர் காமராஜர் |
இயற்பெயர் |
காமாட்சி |
காலம் |
15 ஜூலை 1903 to 2 அக்டோபர் 1975 |
பிறப்பு |
விருதுநகர் |
பெற்றோர் |
குமாரசாமி – சிவகாமி |
பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் பிறந்தார். இவர் சத்தியமூர்த்தியை தன் அரசியல் குருவாக ஏற்றக் கொண்டார்.
- 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ல் இராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதும் ஏப்ரல் 13-ஆம் நாள் முதலமைச்சர் ஆனார். காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத்தலவர் R.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியன் கல்வி அமைச்சராகவும் இருந்தனர்
- காமராசர் காலத்தில் விடுதலைப் போராட்டதில் சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு ஆகிய போராட்டங்களில் பங்கு கொண்டார். 11 ஆண்டுகள் சிறையில் கழித்தார். பின்னாளில் லால் பகதூர் சாஸ்திரியை போட்டியின்றி பிரதமாராகத் தேர்ந்தெடுக்க செய்தார். (சாஸ்திரி எதிர்பாராத முறையில் 1966 ஆம் ஆண்டு தாஸ்கண்டில் உயிரிழந்தார்) பின்னர் இந்திராகாந்தி அம்மையாரை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வழிவகைகள் செய்தார். தலைவர்களை உருவாக்குபவர் (King Maker) எனப் பெயர் பெற்றார்.
- தமது ஆட்சியல் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் செயல்பட வைத்தார். தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு 60% விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார். மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் வழங்க வழி வகை செய்தவர் ஆவார்
- காமராசர் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் சி.சுப்பிரமணியன். காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது அளித்துச் சிறப்பித்துள்ளது.
- மெய்கண்டான் புத்தகச்சாலை என்ற நூல் நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை படித்துச் திறமையாகப் பேசவும் வாதம் செய்யவும் தொடங்கினார்.
- தன்னலமற்ற உழைப்பைக் கண்ட தலைவர் சத்தியமூர்த்தி காமராசரை 1936ஆம் ஆண்டு கட்சியின் செயலாளராக நியமித்தார். சத்தியமூரத்தியைக் காமராசர் தம் அரசியில் குருவாக ஏற்றுக் காெண்டார். இவர் 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்ட்டார்.
- 1945-ல் பிரகாசம், 1947-ல் ஓமந்தூர் இராமாசாமி மற்றும் 1949-ல் குமராசாமி ஆகியோர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்குக் காமராசர் காரணமாக இருந்தார்.
- நேருவின் மறைவைக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரியையும், லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் இநதிரா காந்தியையும் முதன்மையமைச்சராக ஆக்கியதில் இவர் பெரும்பங்காற்றினார். அதனால் தலைவர்களை உருவாக்குபவர் என இவர் அழைக்கப்பட்டார்.
முதலமைச்சர் காமராசர்
- 1954-ல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- காமராசர் முதலமைச்சராக இருந்து காலத்தில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன்.
- தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் இவரால் 1956-இல் தொடங்கப்பட்டது.
- இவரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
சமூக முன்னேற்றத் திட்டங்கள்
- தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளக்கு அறுபது விழக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார். நிலச்சீர்த்திருத்தம் இவரால் கொண்டு வரப்பட்டது. நில உச்சவரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
காமராசர் திட்டம் (K-Plan)
- கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமாராசர் வலியுறுத்தினார்.
அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர்
- புவனேசுவர் நகரில் 1963-ம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்றார்.
சிறப்பு பெயர்கள்
படிக்காத மேதை |
பெருந்தலைவர் |
தலைவர்களை உருவாக்குபவர் |
ஏழைப் பங்காளர் |
கர்மவீரர் |
கருப்புக் காந்தி |
- தமிழக அரசு காமராசர் பிறந்த நாளான சூலை 15-ம் நாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. இவரைக் கல்விக் கண்திறந்தவர் என தமிழுலகம் போற்றுகிறது.
- கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர் தந்தை பெரியார்.
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது.
கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது
- 1975-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாள் இல்வுலக வாழ்வை நீத்தார்.
Dr.அம்பேத்கர்
Related Links
Related
காமராஜர் 1975 ம் ஆண்டு உலக வாழ்வை நீர்தார் என குறிப்பிடபட்டுள்ளது.
ஆனால் வேறு சில notes( tnpsc winner guide) களில் 1972 என குறிப்பிடபட்டுள்ளது .இதில் எது சரியான பதில்..
1975 என்பதே சரியான விடை