Purananuru – புறநானூறு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

புறநானூறு

TNPSC Tamil Notes - Purananuru - புறநானூறு

நூற்குறிப்பு

புறநானூறு புறம் + நான்கு + நூறு
ஆசிரியர் எண்ணிக்கை 158
பாடல் எண்ணிக்கை 400
எல்லை 4-40
பொருள் புறம்
தொகுத்தவர் தெரியவில்லை
தொகுப்பித்தவர் தெரியவில்லை
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
தெய்வம் சிவன்
  • புறம் என்பது மறம் செய்தலும், அறம் செய்தலும் ஆகும்
  • இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களாலும், மன்னர்களாலும் பாடப்பெற்றவை.
  • புறநானூற்றுப் பாடல்கள் மூலம் பண்டைய தமிழக மன்னர்களின் “அறஉணர்வு, வீரம், கொடை, ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை” முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் அறியலாம்.
  • வேறுபெயர்கள் – புறம், புறம்பாட்டு, புறம்பு, தமிழ் கருவூலம்

மேற்கோள்கள் / பாடல்கள்

  • வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய்கூறுவல்
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பது இரண்டே
பிறவும் இல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

– மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

– ஒளவையார்

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

சாலார் சாலார் ஆகுபவே

– கண்ணகனார்

கொடை மடம் படுத லல்லது

படைமடம் படான்பிறர் படைமயக் குறினே

– பரணர்

கணிச்சிக் கூர்மபடைக் கடுந்திறலொருவன்

பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ

– நரிவெரூ உத்தலையார்

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன்மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ! …

 – வெண்ணிற் குயத்தியார்

என்ற பாடல் வரிகள் மூலம் முன்னோர் கப்பற்பயணம் செய்தமையை அறியலாம்

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம் 189; 7-8)

செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம்

8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்

கூம்பொடு மீப்பாய் களையாது

பாய்மரக் கப்பல்களில் பாய் பயன்படுத்தியதை குறிப்பிடுகிறது.

8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்

பாணர் பற்றி குறிப்பிடுகிறது.

8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

முழவு இசைக் கருவியை பற்றி குறிப்பிடுகிறது.

8ஆம் வகுப்பு 2-ஆம் பருவம்

மீனோடு நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
………
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து

ஏற்றுமதி, இறக்குமதி பற்றி தெரிவிக்கிறது

9ஆம் வகுப்பு

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18)

உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம் – 189)

யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் – 192)

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே! (புறம் – 312)

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்ததும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! (புறம் – 183)

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம்

“பூட்கையி ல்லோன் யாக்கை போல” (புறம். 69)

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் – புறம். 134 ( அடி 1 – 2 )
இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீது இல் யாக்கையொ டு மாய்தல்
தவத்தலையே – (புறம். 214, 11-13)
”இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே”. – புறம் 34 (அடி 21-23)

10ஆம் வகுப்பு

தனித்து உண்ணாமை 

“உணடால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தம்மியர் உண்டலும் இலரே…….. ”

புறநானூறு – 182

இன்மையிலும் விருந்தோம்பல்

குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்

புறநானூறு – 333

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைம்….

புறநானூறு – 316

கொடை

செல்வத்தின் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம் 189 :7-8)

போர் அறம்

எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
எதிர்சென்று எறிதலும் செல்லான்

அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்“

 
 

பிறசெய்திகள்

  • ஜி.யு.போப் புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
  • தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்குவது இந்நூல்
  • புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. (12 திணைகளில் உழிஞ்சை திணை தவிர)

கம்பராமாயணம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment