“இறையருள் பெற்ற குழந்தை” என இவரை ஆலய அந்தணர் ஒருவர் பாராட்டினார்.
திகம்பர சாமியர் இவரை “உத்தம மனிதர்” என்று பாராட்டியுள்ளார். பாரதியார் இவரை “புதுநெறி கண்ட புலவர்” என்று புகழந்துள்ளார். “புரட்சித் துறவி” என்று அழைக்கப்டுகிறார் இராமலிங்க அடிகளார்.
இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனத் தொகுக்கப்பட்டுள்ளன. இது ஆறு தொகுதிகள் கொண்டது “ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசம்” இவரது பிற நூல்கள் ஆகும்.
இவர் சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர். சென்னையிலுள்ள கந்தக்கோட்டத்து இறைவனைப் பற்றி இராலிங்கர் வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும், திருவொற்றியூர் சிவபெருமான் மீது “எழுத்தறிவும் பெருமான மாலை” என்னும் நூலையும் இயற்றியுள்ளார். வள்ளலார் பதிப்பதித்த நூல்கள் சின்மயதீபிகை, ஒழிவிலொடுக்கம் மற்றும் தொண்ட மண்டல சதகம்
பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க வடலூரில் அறச்சாலை நிறுவி அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் பசி தீர்த்து வருகிறது. இவர் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்ற செய்தார். அதற்காகவே வடலூரில் அறிவு நெறி விளங்கச் சத்திய ஞான சபையை நிறுவினார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பயிர் வாடத் தாம் வாடினார்.
“பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்பன அவரது முக்கிய கோட்பாடுகள் ஆகும்.
உயிரிரக்கமே வீட்டின் திறவுகோல் என்றார் இராமலிங்க அடிகள். கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று சாடினார். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் என்றார். அருட்பிரகாச வள்ளலார் 1874 ஆம் ஆண்டு தைப்பூச திருநாளன்று இறவா நிலை எய்தினார்.