மதுரையை ஆண்ட வந்த சொக்க நாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். அக்காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறுவது வழக்கமாக இருந்தது. இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது தன் மகன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் இளம் வயதாக இருந்தான்.
அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற கடமை உணர்வால் இவர் உடன்கட்டை ஏறவில்லை. மங்கம்மாள் தனது மகன் அரங்க வீரப்பனுக்கு திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார். பின்னாளில் அம்மை நோயினால் முத்து வீரப்பன் இறந்த சில நாளில் கருவுற்றிருந்த அவரது துணைவியார் ஆண்மகவை பெற்றெடுத்தார். ஆனால் அவரும் துரதிருஷ்டமாக இறந்து போனார். கிபி 1688 ஆம் ஆண்டு தனது பேரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணையில் ஏற்றபட்டான்.
மூன்றாம் முத்துவீரப்பர் காலத்தில் முகலாயப் பேரரசர் ஒளரங்சிப் தம் தக்காண நடிவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி கோட்டையில் பதுங்கிக் கொண்டிருந்த மாரத்திய மன்னன் இராஜாராமைக் கைது செய்த தம் தளபதி சல்பீர்க்கானை அனுப்பினார். சல்பீர்க்கான் செஞ்சிகோட்டையை முற்றுகையிட்டான். 7 ஆண்டு காலம் நீடித்தது. முற்றுகை நடைபெற்ற போதே தமிழக அரசுகளைப் பணிய வைத்து திறைப்பொருள் பெறப் படையனுப்பினார்.
மைசூர் மன்னரும் தஞ்சை மராத்திய மன்னரும் பணிந்து திறை செலுத்தினர். மங்கம்மாள் முறை வந்தது. முகலாயரின் படை வலிமையும் தமது படை வலிமையையும் நன்குணர்ந்து முகலாயர்ருக்கு பணிந்து போக முடிவு செய்தார். தளபதி சல்பீர்க்கானுக்கு விலையுயர்நத பொருள்களை அன்பளிப்பாக கொடுத்துப் போரைத் தவிர்த்தார். முகலாயரின் உதவி பெற்று மாத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார் பாளையச் சிற்றரசர் கைப்பற்றிருந்த பகுதிகளையும் மீட்டார்.
திருவாங்கூர் மன்னர் இரவிவர்மா மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டி திரையை செலுத்தாமல் தவிர்த்து வந்தார். மங்கம்மாள் தளபதி நரசப்பையன் தலைமையில் படையை அனுப்பி பொன், பீரங்கி முதலிய பொருள்களை பெற்றுத் திரும்பியது.
தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கரும் இடையில் நல்லுறவு நிலவவில்லை. ஒரு முறை தஞ்சை ஷாஜி மதுரை நாயக்கர் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். அவற்றை மீட்க, தளபதி நசரப்பையன் தலைமையில் மங்கம்மாள் ஒரு படை அனுப்பினார்.
அப்படை அப்பகுதிகளை மீட்டுத் தஞ்சையை அச்சுறுத்தியது. தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் படையெடுப்பாளர்களுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார். இராணி மங்கம்மாள் காலத்தில் மைசூர் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணை கட்டியபோது மங்கம்மாள் தஞ்சையுடன் பகையை மறந்து அந்நாட்டு அரசு உதவியுடன் எதிர்ப்பு தெரிவித்ததோடு மைசூர் மீது படையெடுக்க தஞ்சை-மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார்.
மதுரை நாயக்க மன்னர்களைப் போலவே மங்கள்மாள் சமயப்பெறையைக் கடைபிடித்தார். கிறித்துவ மதகுருமார்களைச் சமயப் பேரூரை செய்ய அனுமதித்தார். சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்ததோடு போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் ஏற்று விருந்தோம்பினார். இசுலாமியர்களுக்கு மங்கம்மாள் மானியம் அளித்துள்ளார். மக்கள் நலம் பேணும் நல்ல பல பணிகளை மங்கம்மாள் செய்துள்ளார்.
இவர் மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரத்தை கட்டினார். புதி சாலைகள் பல அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை இராணி மங்கம்மாள் சாலை என அழைக்கப்பட்டது. பொதுமக்களுக்காக குடிநீர்க குளங்கள், ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றை தோண்டச் செய்தார். ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார்.
மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் முதலியவற்றை மங்கம்மாள் கட்டியதாக கூறுவர். மங்கம்மாள் திறமையான ஆட்சியாளர்; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டவர். மக்கள் நலம் நாடுவோர் பட்டியலில் மங்கம்மாள் பெயர் மங்காத புகழோடு விளங்கும் என்பதில் ஐயமில்லை.