வையாபுரிப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்
தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர். ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், காலமொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறம்ப படைத்தவர் எனப் பல்முக பரிமாணங்களைக் கொண்டவர்.
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக்குழு தலைவராக செயற்பட்டவர்.
இவர் நெல்லை மாவடடத்தில் உள்ள “சிக்கநரசய்யன்பேட்டை” என்ற ஊரில் பிறந்தவர்
இவரது காலம் 12.10.1891 – 17.02.1956
இவரது பெற்றோர் சரவணப்பெருமாள் – பாப்பம்மாள்
இவர் பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றவர்.
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப்பிள்ளை திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குரைஞரானது மட்டுமல்லாமல் ஏழுஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பின் மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில் வையபாபுரிப்பிள்ளை எழுதி வெளிவந்த பல கட்டுரைகளளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன.
அவருக்கு வாய்த்த மொழிநடை, மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பாராட்டி உள்ளார். அவர் எழுதிய மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம், இமயமலை அல்லது தியானம் முதலிய நூல்கள் அவரது கற்பனைத்திறனையும், சீர்திருத்த ஈடுபாட்டையும் உயர்ந்த நடையையும் வெளிக்காட்டுகின்றன.
உ.வே.சாமிநாயருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை வையாபுரிபிள்ளையைத் தான் சாரும்.
ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப்பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. வையாபுரிப்பிள்ளை 1826-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த “தமிழ் அகராதியின்” (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றோர்.
1936-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1746 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.
இவர் “திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்” தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தை பொற்காலம் என்று கூறுவார்கள்.
சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப்பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் பின்னாளில் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய “வ.ஐ.சுப்பிரமணியம்” ஆய்வு மாணவராக வையாபுரிப்பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.
“மகாகவி சுப்பிரமணிய பாரதி” மற்றும் “வ.உ.சிதம்பரம்பிள்ளை” ஆகிய இருவரிடமும் வையாபுரிப்பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அது மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கதல்தாவில் இருந்த தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக அளித்து விட்டார் வையாபுரிப்பிள்ளை.
நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். அவர் மனோன்மணியம் உரையுடன் தொடங்கி, 1955-ல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.
இவர் 17.02.1956-ல் தன்னுடைய 65 வயதில் இயற்கை எய்தினார்.