Seerapuranam – சீறாப்புராணம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சீறாப்புராணம்

 

TNPSC Tamil Notes - Seerapuranam - சீறாப்புராணம்

நூல் சீறாப்புராணம்
ஆசிரியர் உமறுப்புலவர் (இஸ்லாமிய கம்பர்)
பாடல் எண்ணிக்கை 92 படலங்கள், 5027 விருத்தப்பாக்கள்
உரை எழுதியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர்

நூற்குறிப்பு

  • சீறாப்புராணம் நபிகள் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்.
  • சீறாப்புராணத்தை இயற்றிவர் உமறுப்புலவர்.
  • இஸ்லாமிய கம்பர் எனவும் போற்றப்பட்டவர்.
  • இவரின் தந்தை செய்துமுகமது அலி
  • இவரை ஆதரித்தவர் வள்ளல் சீதக்காதி
  • கீழக் கரையில் பிறந்தவர்
  • எட்டையபுரம் அரசவைப் புலவராக விளங்கியவர்
  • இவர் கடிகை முத்துப் புலவரது மாணவர்
  • வாலை வாரிதி என்னும் கவிஞரை பதினாறவது வயதிலேயே வாதாடி வென்றார்.
  • இவரும் படிக்காசு புலவரும் சமகாலத்தவர்
  • இவரை அமுதா கவிராசர் என்றும் அழைப்பர்
  • அப்துல்காதிர் மரைக்காயர் எனப்படும் சீதக்காதி வள்ளலின் வேண்டுகோள்படி சீறாப்புராணத்தை எழுத தொடங்கினார். சீதக்காதி மறைந்த விட்டதால் பின்னர் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் (80 பாடல்) நிறைவு பெற்றது.
  • உமறுப்புலவர் முதுமொழி மாலை என்ற நூலையும் எழுதியுள்ளார். இவரின் காலம் 17 நூற்றாண்டு.
  • சீறா என்றால் “வாழ்க்கை”, புராணம் என்றால் “வரலாறு” என்று பொருள்படும்
  • சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்தக் காண்டம், ஹிர்ஜ்ரத்துக் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. 92 படலங்கள் மற்றும் 5027 விருத்தப்பாக்களால் ஆனது.

தேம்பாவணி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment