தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன், காப்பிய புலவர்
இயற்றிய நூல்
மணிமேகலை
ஆசிரியர் குறிப்பு
மணிமேகலை நூலின் ஆசிரியர் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மதுரையில் வாழ்ந்தார். கூல வாணிகம் (தானியம்) புரிந்தார். இக்காரணங்களினால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
இளங்கோவடிகளும், இவரும் சமகாலத்தவர்.
இவர் கடைச் சங்கப் புலர்களுள் ஒருவர்.
“தண்டமிழ் ஆசான்”, “சாத்தன் நன்னூற் புலவன்” என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் புகழந்து பாடியுள்ளார்.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
நூற்குறிப்பு
சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெல்வேறு நூல்களாயிலும் ஒரே கதைத் தொடர்புடையமையால் இரட்டைகாப்பியங்கள் எனப்படுகிறது
கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவன் மணிமேகலை. அவளது துறவு வாழ்க்கை பற்றி கூறும் நூல் மணிமேகலை எனப் பெயர் பெற்றது.
இந்நூலுக்கு “மணிமேகலைத் துறவு” என்னம் வேறு பெயரும் உண்டு.
இந்நூல் சொற்சுவையும், பொருட்சுவையும், இயற்கை வருணனைகளும் நிறைந்தது.
பெளத்த சமயச் சார்புடையது. முப்பது காதைகளை கொண்டது.
இவற்றுள் நம்பாடப் பகுதியான ஆதிரை பிச்சையிட்ட காதை பதினாறவது காதையாகும்