Seevaga Sinthamani – சீவக சிந்தாமணி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சீவக சிந்தாமணி

TNPSC Tamil Notes - Seevaga Sinthamani - சீவகசிந்தாமணி

நூற்குறிப்பு

  • இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
  • இதன் ஆசிரியர் சமண சமயத்தவராகிய திருத்தக்க தேவர். இவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
  • விருத்தப்பாவில் எழுந்த முதல் நூல்

இதன் வேறுபெயர்கள்

எலி விருத்தம் மண நூல்
காம நூல் முக்தி நூல்
மறை நூல் இயற்கை தவம்
முதல் விருத்தப்பா காப்பியம் சிந்தாமணி
தமிழ் இலக்கிய நந்தாமணி முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்
  • இந்நூல் 13 இலம்பகங்களையும், 3145 செய்யுள்களையும் உடையது.
  • பெருங்காப்பியத்திற்குரிய உறுப்புகளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருட்களும் இதில் அடங்கும்.
  • கடவுள் வாழ்த்து, சித்த சரணம், அருக சரணம், சாது சரணம், தன்ம சரணம் என்னும் நான்கு பகுதிகளை உடையது.
  • காப்பியத் தலைவரன் சீவகன்
  • சீவகன் தந்தை – ஏமாங்கத நாட்டுத் தலைவன் கச்சந்தன்
  • சீவகன் தாய் – விசயை
  • கெடுமதி உடைய அமைச்சன்  – கட்டியங்காரன்

சீவகனின் மனைவிகள் (8 பேர்)

காந்தருவதத்தை பதுமை
குணமாலை கேமசரி
கனகமாலை மினவிமலை
சுரமஞ்சரி இலக்கணை
  • நண்பன் – புதுமுகன்
  • வளர்ப்புத் தந்தை – கநத்துக்கடன்
  • சீவகனின் ஆசிரியர் – அச்சணந்தி
  • இந்நூலை முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று கூறுவர்.
  • போப் கிரேக்க காவியம் இலியட், ஒடிசிக்கு நிகரான காப்பபியம் சீவக சிந்தாமணி என ஒப்பிட்டுள்ளார்.
  • வடமொழியில் உள்ள சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தா சம்பு ஆகிய நூல்களின் தழுவல் சீவக சிந்தாமணி என்பர்
  • சீவகனின் தாய் அவனை சுடிகாட்டிற் பிறந்தவுடன் புலம்பிக் கூறுவதால் இந்நூலுக்கு இப்பெயர் வந்தது.
  • இந்நூலின் எண்வகை மெய்பாடுகளும், போர்முறை நெறிகளும், இல்ல இன்பங்களும், இசைச் சிறப்பியல்பும், ஐந்திணை ஒழிற் காட்சி இயக்கங்களும் சிறப்பாக கூறப்பட்டள்ளன.
  • இந்நூலின் நோக்கம் சமணசமயக் கருத்துகளை பரப்புவது
  • பல்லவ காலத்தில் இயற்றப்பட்டது.
  • சைவரான நச்சினார்கனியார் உரை எழுதியுள்ளார்.
  • (He is a Prince amoung the Tamil Poets) தமிழ் கவிஞர்களின் இளவரசன் என்று திருத்தக்கத் தேவரை ஜி.யு.போப் பாராட்டியுள்ளார்.

மேற்கோள்கள்

வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுற பெருவரை பெரும்பாம்பு

ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி

தாழ்ந்து வீழந்தவை முழவின் ததும்பின் மதுகரம் பாடச்

சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே.

அடி எதுகை : வீழ்ந்து – ஊழ்ந்து, தாழ்ந்து – சூழ்ந்து

சிலப்பதிகாரம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment