இவர்களைத் தவிர பாம்பாடடிச்சித்தர், அகப்பேயச்சித்தர், கடுவெளிச்சித்தர், அழுகிணிச் சித்தர், சிவவரக்கியார் போன்றோர்கள் சித்தர்களாக விளங்கி உலக நிலையாமை, மூடநம்பிக்கை, ஒழிப்பு, சடங்கு ஆசாராங்களை வெறுத்தல் என்ற புரட்சிகரமான கருத்துகளை உலகிற்கு வழங்கினார்.
பத்திரகிரியாரின் பாடல்கள் “மெய்ஞஞானப் புலம்பல்” மிகவும் சிறந்தவை. அழுகிணிச் சித்தரின் பாடல்கள் உள்ளத்தை உருக்குபவை.
கடவுளைக் காண முயல்பவர்கள் பத்தர்கள் கண்ட தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று தேவாரம் கூறுகிறது.
சித்தர்களின் பஞ்சமர் (ஐவர்) என்று குறிப்பிடப்படுவார்கள்
1. திருமூலர்
2. சிவவாக்கியர்
3. பட்டினத்தார்
4. திருமாளிகைத் தேவர்
5. கருவூரார்
சித்தர் பாடல்கள் மக்கள் இலக்கியம் என்ற போற்றப்படுகிறது