சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியம் ஆகும்.
ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு, முதன்முதலில் நன்னூல் மயிலைநாதர் உரையிலும் , சிறுகாப்பியம் என்னும் வழக்கு சி.வை. தாமோதரம் பிள்ளை கையாண்டத்தாகவும் தெரியவருகிறது.
நூற்குறிப்பு
- கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.
சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்காப்பியம் 3 காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது. அவை
காண்டங்கள் | காதைகள் |
புகார்க்காண்டம் | 10 |
மதுரைக்காண்டம் | 13 |
வஞ்சிக்காண்டம் | 7 |
- “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம்” எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.
- “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என பாரதியாரால் போற்றப்பட்டது.
- ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது சிலப்பதிகாரம்
- காலத்தாலும், கதைத் தொடர்பாலும், பாவகையயாலம் ஒன்றுபட்ட சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக்காப்பியம் என வழங்குவர்.
- இசை நாடகமே சிலப்பதிகாரக் கதையின் உருவம்
- சிலப்பதிகாரத்திற்கு சிறந்த உரை எழுதியவர் – அடியாருக்கு நல்லார்
நூலெழுந்த வரலாறு
சேரன் செங்குட்டுவன், சீத்தலைச் சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற உடனிருந்த பெரும்புலவர் சாத்தனார். “அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையை சிலப்பதிகாரம் என்னம் பெயரால் யாம் இயற்றுவோம்” என்று கூறினார்.
சாத்தனாரும்”அடிகள் நீரே அருளுக” என்றார். இவ்வாறே சிலப்பதிகாரம் உருவாயிற்று.
நூலெழுந்த வரலாறு
- “அரசியல் பிழைத்தோருக்க அறங்கூற்றாகும்”.
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
- “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்னும் முப்பெரும் உண்மைகளைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.
- 3 எண் பொருந்தி வரும் நூலிது
3 மன்னர்கள் | 3 துறைமுகம் | 3 தலைநகர் |
பாண்டியன் | கொற்கை | மதுரை |
சோழன் | காவிரி பூம்பட்டினம் | பூம்புகார் |
சேரன் | முசிறி | வஞ்சி |
3 நீதிகள் – அ, உ, ஊ | ||
இயற்கையாக வாழ்த்தப்படும் பொருள்கள் 3 – ஞாயிறு, திங்கள், மழை |
- புறாவின் துன்பம் போக்கிய சோழன் – சிபி
- பசுவின் துன்பம் போக்கிய சோழன் – மனுநீதி
- மாசாத்துவன் மகன் கோவலன் – 16 வயது (திருமணத்தின் போது)
- மாநாய்க்கன் மகள் கண்ணகி – 12 வயது (திருமணத்தின் போது)
- சித்திராபதி மகள் மாதவி – (தலைக்கோல் அரிவை)
- கவுந்தியடிகள் சமணத் துறவி
- மாதரி – இடையர் குலப்பெண் மகள் ஐயை
- கண்ணகியின் சிலம்பில் மாணிக்கப்பரல்கள் உள்ளன.
- கோப்பெருந்தேவியின் சிலம்பில் முத்துப்பரல்கள் உள்ளன.
- “கணவனை இழந்தோருக்குக் காட்டுவ தில்லையென்று
இணையடி தொழுது வீழ்ந் தனளே மடக்கொடி”
– கோப்பெருஞ்சோழன் கூற்று
– விளைவு வாக்கியம்
– சுவை அவலச்சுவை
- யானோ அரசன், யானே கள்வன் – பாண்டியன் கூற்று
- சீறடிச் சிலப்பின் ஒன்று கொண்டு யான்போய்
மாறி வருவன்மயங்காது ஒழிக” – கோவலன்
- பெண்ணே உன் கணவன் கள்வன் அல்லன்
அவ்வாறு கூறி இவ்வூரை தீ உண்ணும்” – வானொலி (அ) அசரீரி
பாவகை
ஆசிரியப்பாவாலும் கொச்சககலிப்பாவாலும் ஆனது
வேறு பெயர்கள்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் | முதற் காப்பியம் |
முத்தமிழ் காப்பியம் | நாடகக் காப்பியம் |
ஒற்றுமைக் காப்பியம் | குடிமக்கள் காப்பியம் |
சமணம் ஆயினும் சமயச் சார்பற்ற காப்பியம் | ஒருமைப்பாட்டு காப்பியம் |
மூவேந்தர் காப்பியம் | போராட்டகாப்பியம் |
பத்தினிக் காப்பியம் | முதன்மைக் காப்பியம் |
புதுமைக் காப்பியம் | புரட்சிக் காப்பியம் |
பொதுமை, வரலாற்று காப்பியம் | பைந்தமிழ் காப்பியம் |
- ஆசிரியர் – இளங்கோவடிகள் (சேர மன்னர் செங்குட்டுவரின் சகோதரர் இவர்)
- சாத்தனாரின் நண்பர்
- சிறந்த உரை – அடியாரக்கு நல்லார்
- முழுவதும் பதங்களுக்கு உரை – அரும்பத உரைக்காரர்
- முழு உரை – ந.மு. வேங்கடசாமி நாட்டார்
ஆசிரியர் குறிப்பு
இளங்கோவடிகள் சேர மரபினர். இவரின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சரலாதன், தாய் – நற்சோணை. இவர் தமையன் சேரன் செங்குட்டுவன்.
இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தை பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோவடிகள் இளமையிலோ துறவறம் பூண்டு குணவாயிற் கோட்டதில் தங்கினார்.
இளங்கோவடிகள் அரசியல் கருத்து வேறுபாடு கருதாதவர்.
சமய வேறுபாடற்ற துறவி.
இவர் காலம் இரண்டாம் நூற்றாண்டு.
நாட்டுப்புறப்பாடல்களுக்கு சிறப்பு தந்து பாடியவர்.
இளங்கோவடிகளின் சிறப்பை உணர்ந்த பாரதியார் “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கேணுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” எனப் புகழ்கிறார்.
மேற்கோள்
9ஆம் வகுப்புகண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி (கண்ணெழுத்துகள்) |
10ஆம் வகுப்புதிண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலையை குறிக்கும் அடிகள் “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் சிலப்பதிகாரம், காடுகாண் காதை : 53-55 |
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக உணர்த்துவது. “…………………….. தொல்லோர் சிறப்பின் – சிலப்பதிகாரம், 16:72,73 |