காவிரி பாயும் சோழவள நாடு , கலைகளின் விளைநிலம் விக்கவைக்கும் கட்டடக்கலை, சிற்பக்கலை கொழிக்கும் ஊர் கும்பகோணம். கும்பகோணத்தில் தென்பறம் அரிசிலாறு பாய்கிறது. இதன் தென்கரையில் தாராசுரம் ஊர் உள்ளது. இங்குதான் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராசசோழனால் கட்டப்பட்ட ஜராவதீசுவரர் கோயில் உள்ளது. இங்குள்ள சிற்பங்களில் கதையும், காவியமும் பொதிந்திருக்கிறது.
முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒருசிற்பம். யானை வதம் செயது, அதன் தோலை தன் மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரிபோர்த்தவர் (கஜசம்ஹாரமூர்த்தி) கதை இன்னொரு சிற்பம். அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம் இப்படி பல சிற்பங்கள் உள்ளன.
இராமாயண, மகாபாரதக் கதைகள், இரதி மன்மதன் கதைகள், சிவபுராணக் கதைகள் என எண்ணிலடங்காத கதைகள் நம்மை ஈர்க்கின்றன. அவற்றுடன் பரதநாட்டிய அடவுகளும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.
அன்னம் பாலிக்கும் அற்புத அன்னபூரணி இன்றைய கண்தானத்திற்கு அன்றே எடுத்துக்காட்டாக அமைந்தவர் கண்ணப்பர். தமிழகச் சிற்பக்கலை சிறப்புக்க ஒரு சோற்றுப்பதமாய் கும்பகோணம் விளங்குகிறது. கோயிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கல் படிகள் “சரிகமபதநி” என்னும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன்.
தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்டபமும், வாண்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் “கார்ல் சேகன்” என்ற வானவியல் அறிஞர் கூறியுள்ளார்.
அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசைஞானியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் முதலிய 63 நாயன்மார்களின் கதைகளைக்கூறும் படைப்புச் சிற்பங்களும் உள்ளன. தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமானது இக்கோயில். இக்காேயிலை மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை மரபு அடையாள சின்னமாக “யுனெஸ்கோ அமைப்பு” அறிவித்துள்ளது. ஒற்றை வரியில் இதைக் “கலைகளின் சரணாலயம் என்றும் கூறுவர்.