Sirpy – சிற்பி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சிற்பி – Sirpy

TNPSC Tamil Notes- Sirpy - சிற்பி

Group 4 Exams – Details

புலவர் சிற்பி பாலசுப்பிரமணியம்
பிறப்பு கோவை மாவட்டம் – பொள்ளாச்சி வட்டம் – ஆத்துப்பொள்ளாச்சி கிராமம்
விருதுகள் பாவேந்தர் விருது, கபிலர் விருது, தமிழ்சங்க மகாகவி உள்ளூர் விருது, லில்லி தேவசிகாமணி விருது

ஆசிரியர் குறிப்பு

  • சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் என பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்
  • கோவை மாவட்டம் – பொள்ளாச்சி வட்டம் – ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர்.
  • கேரளத்தில் பள்ளிக் கல்வி பயின்றவர்.
  • 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்
  • படைப்பு இலக்கியத்திற்காகவும் (2003), மொழிபெயர்ப்பிற்க்காவும் (2001) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
  • தமிழக அரசின் “பாவேந்தர் விருது”, குன்றக்குடி ஆதீனம் “கபிலர் விருது”, திருவனந்தபுரம் “தமிழ்சங்க மகாகவி உள்ளூர் விருது”, எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.

இவரின் கவிதைத் தொகுப்புகள்

நிலவுப்பூ (1963)
ஒளிப்பறவை (1971)
புன்னகை பூக்கும் பூனைகள் (1982)
சூரிய நிழல் (1990)
ஒரு கிராமத்து நதி (1998) (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)
பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு (2001)
தேவயாணி (2006)
கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
சிரித்த முத்துக்கள் (1966)
சர்ப்ப யாகம் (1976)
மெளன மயக்கங்கள் (1982) (தமிழக அரசு பரிசு பெற்றது)
இறகு (1996)
பூஞ்யங்களின் சங்கிலி (1999)
மூடுபனி (2003)
நீலக்குருவி (2012)
ஆதிரை (1992) (கவிதை நாடகம்)


சி.மணி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment