Sirukathaigal – சிறுகதைகள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சிறுகதைகள் – Sirukathaigal

TNPSC Tamil Notes - Sirukathaigal - சிறுகதைகள்

Group 4 Exams – Details

சிறுகதையின் இலக்கணம்

  • கற்பனைக் கதைகள், உண்மை நிகழ்வுகள் மற்றும் நகைச்சுை கலந்தே சிறுகதைகள் எழுதப்படும்.
  • இவற்றை முறையே தொல்காப்பியர் கூறிய பொருளோடு புணராப் பொய்ம்மொழி பொருளோடு புணர்ந்த நகைமொழி என்று கூறியவற்றோடு ஒப்புணரத் தக்கன.
  • எட்டுத்தொகைப் பாடல்கள் அனைத்தும் சிறுகதை வடிவின எனலாம். காப்பியங்கள், புரானங்களில் காணப்படும் கிளைக்கதைகளும் சிறுகதை, நெடுங்கதை வடிவின
  • தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சகட்டம், முடிவு என்னும் 5 கூறுகளைச் சிறுகதை கொண்டிருக்கும். அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கதை நீளக்கூடாது.
  • குதிரைப் பந்தயத்தின் தொடக்கம், முடிவு போல கூர்மை இருக்க வேண்டும். கிளைக் கதைகள் கூடாது.
  • கதையில் கூறப்படும் ஒவ்வொரு நிகழ்வும் கதையோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பன சிறுகதைக்கான வரையறைகள்

சிறுகதை வரலாறு

  • கதை கூறலும் கேட்டலும் மனித வாழ்க்கையில் கலந்த ஒன்று. எனவே ஒவ்வொரு மனித சமூகத்திலும் கதைகள் நிரம்ப உள்ளன. எனவே சிறுகதையைத் தனியொரு இலக்கியமாகக் கருதுகின்ற நோக்கினை அமெரிக்காவைச் சேர்ந்த எட்கர் ஆலன்போ தொடங்கி வைத்தார்.
  • மேனாட்டர் வரவும் அறிவியில் வளர்ச்சியும், பத்திரிகைகளின் பக்கபலமும் சிறுகதைகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன.
  • 18-ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருகதை தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி எனலாம்.


ஐங்குறுநாறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment