Sirupanjamoolam – சிறுபஞ்சமூலம் பற்றிய செய்தி குறிப்புகள்

சிறுபஞ்சமூலம்

TNPSC Tamil Notes - sirupanjamoolam - சிறுபஞ்சமூலம் 

நூற்குறிப்பு

  • சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இதன் ஆசிரியர் காரியாசன்.
  • கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
  • அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயை போக்குவன. ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

பாவகை

  • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.

ஆசிரியர் குறிப்பு

  • காரியாசன் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவரும் கணிமேதாவியாகும் ஒரு சாலை மாணாக்கராவர்.
  • பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

சிறந்த தொடர்கள்

  • தனத்தால் போகம் தவத்தால் சுகம்சுகமா

ஞானத்தால் வீடாகும் நாட்டு

  • தோற்கன்ற காட்டி கறவார் கறந்தபால்

பாற்பட்டா ருண்ணார் பழிபாவம்

  • மான மழிந்த பின் வாழாமை முன்னினிது
  • “பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு”

மேற்கோள்

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது

சிறுபஞ்சமூலம் 64

இனியவை நாற்பது

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment