சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் ஒருவராவர்.
இவரின் இற்பெயர் ரங்கராஜன்
இவரது காலம் 1935 – 2008
தன்னுடைய தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படக்கதை, வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர்.
பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் பொதுமேலாளராக பணியாற்றினார்.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர்.
தமிழக அரசு “கலைமாமணி விருது” இவரின் எழுத்துப்பணியை பாராட்டி வழங்கியுள்ளது
இவரது சிறுகதை தொகுப்புகள் “ஸ்ரீரங்கத்து தேவதைகள், நிஜத்தை தேடி, நிலம் நீர் காற்று ஆகாயம்” ஆகும்.