ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
ஆசிரியர் குறிப்பு
சுந்தர ராமசாமி நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்
இவரது காலம் 30.05.1931 – 14.10.2005
இவர் நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோயில் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டிருந்தார்.
“பசுவய்யா” என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுதியவை இவர் எழுத்துக்கள்.
தன் இளைய பருவத்தில் “தொ.மு.சி.ரகுநாதனிடம்” மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி.யின் “மார்க்ஸிய தத்துவங்களினால் ஈர்க்கப்பட்டவராக இருந்தார்.
பின்னர் தொ.மு.சி. ஆசிரியராக இருந்த”சாந்தி” என்ற பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார்.
பின்னர் காலச்சுவடு என்ற பத்திரிக்கையும் நடத்தினார்.
ஆழ்ந்த அனுபவம், கூர்ந்த நோக்கு, படிமம், குறியீடுகள் இவரது தனிச்சிறப்பு
பல்லக்கு தூக்கிகள், ரத்னாபாயின் ஆங்கிலம், முட்டைக்காரி, திரைகள் ஆயிரம், நைவேத்தியம், மறியா தாமுக்கு எழுதிய கடிதம், காகங்கள், கூடி வந்த கணங்கள், கதவுகளும் சன்னல்களும் அந்த நிமிடங்கள், செங்கமலமும் ஒரு சோப்பும், கைக்குழந்தை, பள்ளம்,விசாகம், பள்ளியில் ஒரு நாய்க்குட்டி, அடைக்கலம், பிரசாதம், சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன.