Sundarar – சுந்தரர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சுந்தரர் – Sundarar

TNPSC Tamil Notes - Sundarar - சுந்தரர்

Group 4 Exams – Details

பெற்றோர் சடையனார் – இசை ஞானியார்
காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
சிறப்பு பெயர் வன்தொண்டர், தம்பிரான் தோழர்
நூல்கள் தேவாரம், திருத்தொண்டத்தொகை
  • சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்.
  • இறைவனைத் தம் தோழனாக எண்ணி வழிபட்ட இவர் இறைவனால் “வன்தொண்டர்” என அழைக்கப்பட்டார்.
  • சுந்தரர் திருமண மேடையில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். பித்தா என இறைவனை ஏசினாலும் இறைவனால் அருளப்பட்டார். இறைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி
“பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே  நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூரட்டுறையுள் அத்தா எனக்காளாய் இனி
அல்லேன் எனலாமே” எனப்பாடினார்
  • சுந்தரர்-தேவாரம் பன்னிரு திருமுறை வைப்பில் ஏழந்திருமுறையாக வைக்கப்படடுள்ளது.
  • சுந்தரர் திருமுனைப்படி நாட்டில் திருநாவனூரில் தோன்றினார். இவர் பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆவர். இவர் தம் பிள்ளைத் திருப்பெயர் நம்பி யாரூரர் என்பதாம்.
  • இவர் திருமுனைப்பாடி நாட்டையாண்ட நரசிங்க முனையரையார் என்ற சிற்றரசரால் மகனமை கொண்டு வளர்க்கப்பட்டார்.
  • சிவபெருமான் இவரைத் தம் தோழராக கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நட்பின் உரிமையைச் சுந்தரர் தேவாரத்தில் பரக்கக் காணலாம்.
  • பல தலங்களுக்கு சென்று இறைவனாகிய சிவன் மீது பாடியுள்ள பாடல்களை “திருப்பாட்டு” என்று அழைக்கின்றனர்.
  • திருப்பாட்டினை “சுந்தரர் தேவாரம்” எனவும் அழைப்பர்
  • இவர் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலையே முதனூலாக் கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.
  • இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி

திருஞானசம்பந்தர்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment