திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி வட்டம் – தேவக்குடி
காலம்
1921-1982
விருது பெற்ற நூல்
சக்தி வைத்தியம் (சாகித்ய அகாதமி விருது)
“தி.ஜா” என அழைக்கப்படுகிறார்.
அகில இந்திய வானாெலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
தனது ஜப்பான் அனுபவங்களை “உதயசூரியன்” தலைப்பில் “சுதேசிமித்திரன்” என்ற வார இதழில் எழுதினார். 1967-ல் இதனை நூலாக வெளியிடப்பட்டது.
ரோமானிய – செக்க்கோஸ்லாேவோக்கியா சென்ற அனுபவங்களைக் “கருங்கடலும் கலைக்கடலும்” என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
தமது காவிரிக்கரை வழியான பயணத்தை “நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
இவரது மற்றுமாெரு பயணக்கட்டுரை, அடுத்த “வீடு ஐம்பது மைல்” என்பதாகும்.
இவர் எழுதிய “சக்தி வைத்தியம்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1979-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
உணர்வுகளுக்கு முதன்மை, அழகியல் பரிமாணம், உரையாடல் வடிவம், பெண்ணியச் சிக்கல் பேசுவது இவரது சிறப்பு
சிலிர்ப்பு, கொட்டுமேளம், அக்பர் சாஸ்திரி, கோபுர விளக்கு, கைகாட்டி, நாதரட்சகர், வீடும் வெளியும், ஆயிரம் பிறைகளுக்கு அப்பால் இவரது கதைகள்.
“அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.