Tamil Moliyil Ariviyal Sinthanaigal – தமிழ் மொழியல் அறிவியல் சிந்தனைகள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தமிழ் மொழியல் அறிவியல் சிந்தனைகள் – Tamil Moliyil Ariviyal Sinthanaigal

TNPSC Tamil Notes - Tamil Moliyil Ariviyal Sinthanaigal - தமிழ் மொழியல் அறிவியல் சிந்தனைகள்

 • “அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே அறிவியில். அறிவியல் வாழ்வை வளம்படுத்துகிறது. மொழியைப் பண்படுத்துகிறது என்பர அறிஞர். தமிழ்மொழிக்கு அது முற்றிலும் பொருந்தும். தமிழ்மொழி சிந்தனைக் கருவூலமாய் திகழ்வது; அறிவுச் சுரங்கமாய் இலங்குவது.
 • தமிழ் இலக்கியங்களை நுண்ணதின் ஆய்கின்ற போது எத்துணையே அறிவியல் கருத்துகள் ஆழப்புதைந்து கிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக்கூடும் என்பதை அதனை ஆராய்வோரோ அறிவர்.
 • பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. மேலைநாட்டறிஞர் இது குறித்து விரிவா ஆராய்ந்துள்ளனர். ஆய்ந்தும் வருகின்றனர். ஆனால் உலகம் உருண்டை என்பதனை 14-ம் நூற்றாண்டிற்குப் பிறகேமேலை நாட்டினர் உறுதி செய்தனர். இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதனையும், இவ்வண்டப் பரப்பையும் அதன் மீது  அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆன்மஇயல் பேசும் திருவாகம் விண்ணியலையும் பேசுகிறது.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந்த தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”

இத்திருவாசக வரிகள் தெளிந்த வானியல் அறிவை வெளிப்டுத்துகின்றன. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை இப்பபாடல் ஆழமாக விளக்குகிறது.

 • உலகம் என்னும் தமிழ்ச்சொல் உலவு என்னும் சொல்லின் அடியாக பிறந்தது. உலவு என்பது கற்றுதல் என்ற பொருளைத் தரும். உலகம் தன்னையும் ஞாயிறையும் சுற்றி வருகிறது என்ற அறிவியல் கருத்து. இதில் வெளிப்படுவதனைக் காணலாம். ஞாலம் என்னும் தமிழ்ச்சொல் ‘ஞால்’ என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர். ‘ஞால்’ என்பதற்குத் ‘தொங்குதல்’ என்பது பொருள். எவ்விதப் பற்றுக் கோடுமின்றி அண்ட வெளியில் உலகம் தொங்கி கொண்டிருப்பதனை இஃது உணர்த்துகிறது.
 • வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. இதனையும் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர். இதனை வறிது நிலைஇய காயமும் (புறம்.30) என்னும் பாடல் வரிகள் உணர்த்தும். வலவன் ஏவா வானூர்தி (புறம்.27) என்னும் தொடர் வலவனால் ஏவப்படாத வானூர்தியை பழந்தமிழர்கள் விண்ணில் செலுத்தி இருக்கலாம் என உணர்த்துகிறது. இது தற்போதைய செயற்கைக் கோளைப் போன்றது எனக் கருத இடமுண்டு.
 • இன்றைய வாழ்வில் பொறியியல் பெரும்பங்கு வகிக்கிறது. பலவேறு எந்திரங்கள் பொறியியல் மூலம் உருவாக்கப்படுகின்றன. பண்டைத் தமிழகத்தில் எந்திரவியல் பற்றிய அறிவு ஆழமாக இருந்திருக்கிறது. கரும்பைப் பிழிவதற்கும் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனைத் “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடும்.
 • நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதனை ‘அந்தக்கேணியும் எந்திரக் கிணறும்’ என்னும் பெருங்கதை வரியின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், பெருங்கதையில் வரும் எந்திர யானை கிரேக்கத் தொன்மத்தமில் குறிப்பிடும் ‘டிராய்’ போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக் குதிரையுடன் ஒத்தது.
 • சிலப்பதிகாரம் பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்குகிறது. ஊர்காண் கதையில்

“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்”

என்னும் இவ்வடிகள் ஆழ்ந்த பொருளுடையன. ஐவை மணிகளும் ஒளிவிடும் திறத்தினால் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் மூலப்பொருள் ஒன்றே. இவ்வறியியல் சிந்தனை. தற்போதைய வேதியல் கூற்றுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

 • தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுபடுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். மேலும் செம்மண், களர்நிலம், உவர்நிலம் எனவும் பகுத்துள்ளனர். நிறத்தின் அடிப்படையில் செம்மணி நிலம் எனவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலம் எனவும் நிலத்தைத் தமிழர் வகைப்படுத்தினர்.
 • தமிழர் செம்மண் நிலத்தை அதன் பயன் கருதிப் போற்றினர். இதனைச் ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்னும் குறுந்தொகை வரி உணர்த்தும். உவர்நிலம், மிகுந்த நீரைப் பெற்றிருந்தும் பயன் தருவதில்லை. இதனை, ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்’ என்னும் புறநானூற்று வரிகள் புலப்படுத்துகின்றன. எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம்.  இதனைப் ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ என்பார் திருவள்ளுவர்.
 • ஐவகை நிலங்களுக்கும் உரிய உணவு, விலங்கு, பறவை போன்றவற்றையும் தமிழர் பகுத்தும் வகுத்தும் வைத்துள்ளனர். இன்றைய அறிவியல் அணுவைப் பிளக்கவும் சேரக்கவும் முடியம் என ஆயந்திருக்கிறது. ஒளவை ‘ஓர் அணுவினைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி’ என்று சொல்கிறார். ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணிணும் உளன்’ எனக் கம்பரும் கூறுவார். இதன் மூலம் அணுச்சேர்ப்பும் அணுப்பிரிப்பும் பற்றிய கருத்துக்கள் அன்றே அரும்பியுள்ளதனை அறியலாம்.
 • நீர் மழையாக மண்ணிற்கு வருவது ஆவியாகி விண்ணிற்குச் செல்வதுமான சுழற்சி எக்காலத்தும் நிகழந்து கொண்டிருப்பது. இவ்வியக்கமே உலகை வளப்படுத்துகிறது. இந்நீர் சுழற்சி இயக்கம் இயற்கையாக நிகழக்கூடிய ஒன்றே. இவ்வியக்கம் இல்லை எனில் மழைவளம் குன்றும், வெப்பநிலை மிகும், புவியின் தட்பவெப்பநிலை மாறும். இச்சுழற்சி முறைதான் உயிர்கள் தழைத்திருப்பதற்கோர் காரணம். இவ்விளைவு நிகழவில்லையெனில் கடலும் வற்றும். இதனை

“நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
நான்நல்கா தாகி விடின்” – எனத் திருவள்ளுவர் கூறுகின்றார்

 • ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பார் திருமூலர். உடலை ஓம்பவேண்டியதன் இன்றியமையாமையைத் தமிழர் அறிந்திருந்தனர் திருவள்ளுவர். ‘மருந்து’ என்னும் ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார். உடல் உறுதியாய் இருப்பதற்கு வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலையே காரணமாகும். அவற்றின் சமநிலை தவறும்போது நோய்மிகும். அவற்றைச் சமப்படுத்த இயற்கை தரும் காய்கனிகளிலிருந்தே மருந்து கண்டு உண்டனர். ‘மருந்தாகிப் தப்பா மரத்தற்றார்’ என்னும் திருக்குறள் வரி, தமிழ் மருத்துவத்தின் தொன்மையை எடுத்து இயம்பும், பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்தும் சித்த மருத்துவமாயிற்று
 • அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் தமிழர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன. உலகில் பின் விளைவுகளற்ற மருத்துவங்களுள் சித்த மருத்துவமும் ஒன்று. இன்று பரவராகப் பயின்று வரும் இயற்கை மருத்துவம் என்றும் மருந்தில்லா மருத்துவ  முறையை அன்றே நம் தமிழர் கண்டறிந்துள்ளனர்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்” – என்னும் திருக்குறள் இக்கருத்திற்கு அரண் சேர்க்கிறது.

 • “கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன்” என்னும் செய்தியும், ” உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச் சுட்டுவேறார் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பர் வாக்கும் அறுசுவை மருத்துவத்தை மெய்பிக்கின்றன. மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடு முடியதால் அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
 • திருவாசகத்தில் பல்வகை அறிவியல் செய்திகள், உயரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விலவிக்கிடக்கின்றன. ‘புல்லாகிப் பூடாய்’ எனத் தொடங்கும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாய்க் கூறுகின்றன. மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் எனத் தொடரும் பாடலடிகள் கருவியில் அறிவை நன்கு தெரிவிக்கின்றன.

ஐங்குறுநாறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment