Tamilagam – Oorum Perum Thotram, Matram – தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம், மாற்றம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம், மாற்றம் – Tamilagam – Oorum Perum Thotram, Matram

TNPSC Tamil Notes - Tamilagam - Oorum Perum Thotram, Matram - தமிழகம் - ஊரும் பேரும் தோற்றம், மாற்றம்

  • இயற்கையோடு இணைந்து வாழந்த தமிழ்மக்கள், தம் குடியிருப்பு பகுதிகளை ” ஊர்” என்று அழைத்தனர். பல ஊர்கள் உருவானதால் நிலவகைக்கேற்ப பெயரிட்டு, மலையூர், காட்டூர், மருதூர், கடலூர் என வழங்கினர். இவ்வாறு ஊரும் பேரும் தோன்றின.

குறிஞ்சி நில ஊர்கள்

  • மலையும் மலை சார்ந்த பகுதியும் “குறிஞ்சி நிலம்” என அழைக்கப்பட்டது. மலையின் அருகே உள்ள ஊர்கள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை ஆகிய ஊர்கள் ஆகும்
  • ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி “மலை” எனவும், மலையின் உயரத்தில் குறைந்ததைக் “குன்று” எனவும், குன்றிலும் உயரத்திலும் குறைந்ததைக் “கரடு எனவும், “பாறை” எனவும் பெயரிட்டு அழைத்தனர். இவற்றை ஒட்டி வாழ்ந்த மக்கள், தம் வாழ்விடங்களுக்கு ஊர் என்னும் பெயரைச் சேர்த்து ஊர் பெயராகளாக்கினர்.
  • குன்றை அடுத்துள்ள ஊர்கள்: குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன. பூம்பாறை, சிப்பிப்பாறை, வால்பாறை, குட்டப்பாறை என்னும் ஊர் பெயர்களுக்கான காரணத்தையும் இதனால் அறியலாம்.
  • மலையை குறிக்கும் வட சொல் கிரி, சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தாகிரி என்பன மலையொட்டிய ஊர்பெயர்களே.
  • குறிஞ்சி நிலமக்கள் மலையிலிருந்து வேறு இடங்களுக்குச் சென்று தங்கியிருந்த போதும் தங்கள் நிலப்பெயரை மறவாது குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, மொடக்குறிச்சி எனப் பெயர் வைத்தனர். குறிஞ்சி என்னும் சொல்லே மருவி “குறிச்சியாயிற்று” எனலாம்.

முல்லை நில ஊர்கள்

  • மரஞ்செறிந்த காடுகள் தமிழகத்தில் பழங்காலத்தில் மலிந்திருந்தன. மரங்கள் சூழ்ந்த பகுதிக்கு குடிபெயர்ந்த மக்கள், மரங்களுக்குப் பெயர்சூட்டி, அம்மரப்பெயர்களோடு ஊர்ப்பெயர்களையும் வழங்கினார். அத்தி(ஆர்) மரங்கள் சூழந்த ஊர் ஆர்க்காடு எனவும், ஆலமரங்கள் நிறைந்த ஊர் ஆலங்காடு எனவும், களாச்செடிகள் நிறைந்த பகுதி களக்காடு எனவும், மாமரங்கள் நிறைந்த ஊர் மாங்காடு எனவும், பனைமரங்கள் நிறைந்த ஊர் பனையபுரம் எனவும் பெயரிட்டுத் தம்மிடத்தைக் குறிபிட்டனர்.
  • காட்டில் நடுவில் வாழ்ந்த மக்கள் அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும் தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் பட்டி, பாடி என்றழைக்கப் பெற்றன.
  • ஆட்டையம்பட்டி, காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி, சின்னக் கொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி முதலிய ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

நெய்தல் நில ஊர்கள்

  • பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் பட்டினம் எனவும், சிற்றூர்கள் பாக்கம் எனவும் கூறப்பட்டது.
  • நெடிய கடற்கரையை உடைய தமிழகத்தில் “பரதவர்” வாழ்ந்த ஊர்கள் கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை எனப் பெயர் பெற்றிருக்கின்றன.
  • இக்காலத்தில்  மீனவர்கள் வாழுமிடங்களின் பெயர்கள், குப்பம் என்னும் பெயரைச் சேர்த்துப் பெருகி வருகின்றன.

நெய்தல் நில ஊர்கள்

  • பெருவேந்தரும் குறுநில மன்னரும் அரண்கள் அமைத்து மக்களைக் காத்தனர். அரண்களும் கோட்டையும் ஒன்று.
  • கோட்டை சூழவிருந்த ஊர்களே கந்தவர்க்கோட்டை, தேவக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, நிலக்கோட்டை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை வழங்கலாயின.

திசையும் ஊர்களும்

  • நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப் பெற்றனர்.
தம் ஊருக்கு கிழக்கே எழுந்த ஊர் கீழுர்
மேற்கே அமைந்த ஊர் மேலூர்
தெற்கே அமைந்த ஊர் தென்பழஞ்சி
வடக்கே அமைந்த ஊர் வடபழஞ்சி
  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 75 பாளையங்களாகப் பிரித்து  ஆட்சி செய்தனர். அதால் ஊர் பெயர்களுடன் பாளையம் சேர்க்கப்பட்டது.
  • ஆரப்பாளையம், இராசபாளையம், குமாரப்பாளையம், கோரிப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், மேட்டுப்பாளையம் எனப் பலவாகும்.
  • கல்வெட்டுகளில் காணப்படும் ‘மதிரை’ மருதையாகி இன்று ‘மதுரை’யாக மாறியுள்ளது.
  • ‘கோவன்புத்தூர்’ என்ற பெயர் மருகி ‘கோயம்புத்தூர்’ ஆகி இன்று ‘கோவை’யாக மருகியுள்ளது.
  • நாடு என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது. தமிழர் வாழந்த நாடு தமிழ்நாடு எனப்பட்டது.
  • மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்றும் அழைக்கப்பட்டன. முந்நாடுகளின் உட்பிரிவுகளும் ‘நாடு’ என்று அழைக்கப்பட்டன. (கொங்குநாடு, தொண்டை நாடு)
  • ‘முரப்பநாடு’ என்பது பாண்டி மண்டலத்தை சேர்ந்த நாடுகளுள் ஒன்று ‘முறப்பநாடு’ எனும் இப்பெயர்  ‘பொருநை’ (தாமிரபரணி) ஆற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றன. இவ்வாற்றின் மறுகரையிலுள்ள மற்றொர் சிற்றூர் ‘வல்லநாடு’ என்னும் பெயருடையது. இங்ஙனம் கூறைநாடு என்பதே கொரநாடென மருவிற்று.
  • சிறந்த ஊர்கள் ‘நகரம்’ என்னும் பெயரால் வழங்கப்பட்டது. நாட்டின் ‘தலைமை சான்ற நகரம்’ ‘தலைநகரம்’ எனப்பட்டது.
  • முன்னாளில் ஊர், பட்டி என்பன பின்னாளில் நகரங்களாயின.
  • ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் ‘குருகூர்’ தற்போது ‘ஆழ்வார்திருநகரி’ என அழைக்கப்படுகிறது.
  • பாண்டிய நாட்டிலுள்ள ‘விருதுபட்டி’ இன்று ‘விருதுநகர்’ என வழங்கப்படுகின்றது.
  • தமிழ்நாட்டில் தலைசிற்நது விளங்கம் நகரம் ‘சென்னை மாநகரம்’ அந்நாளில் சென்னையில் கடற்கரைச் சிற்றூர்களாக காட்டிசியளித்தது. மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகும். மயிலாப்பூரிலுள்ள ‘கபாலீச்சுரம்’ எனும் ‘சிவலாயம்’ மிகப்பழமை வாய்ந்தது.
  • திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. இவ்வூரின் பழையப்பெயர் ‘அல்லிக்கேணி’ என்பதாகும். அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணியாயிற்று.
  • திருவல்லிக்கேணி வடக்கே மேடும் பள்ளமாக பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு. இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அடியில் பெரும்பள்ளமாக அந்நாளிலே காணப்பட்டது.

புரம்

  • புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெயர் பெற்ற ஊர் பின்னர் ‘புரம்’ என்பது சேர்ந்து காஞ்சியுரமாயிற்று.
  • பல்லவபுரம் (பல்லாவரம்), கங்கை கொண்ட சோழபுரம், தருமபுரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

பட்டினம்

  • கடற்கரையில் உருவாகும் நகரங்கள் ‘பட்டினம்’ எனப் பெயர் பெறும் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகியவை ‘பட்டினம்’ எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.

பாக்கம்

  • கடற்கரைச் சிற்றூர்கள் ‘பாக்கம்’ எனப் பெயர் பெறும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் ‘பாக்கம்’ எனப் பெயர் பெற்ற ஊர்களை குறிப்பிடலாம்.

புலம்

  • ‘புலம்’ என்னும் சொல் ‘நிலத்தைக்’ குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தாமரைப்புலம், குரவைப்புலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

குப்பம்

  • நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் ‘குப்பம்’ என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்

தூங்கா நகர்

  • ‘தென்னிந்தியாவின் ஏதேன்ஸ்’ எனப் புகழ்பெற்ற நகரம் ‘மதுரை’ ஆகும். ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதால் ‘திருவிழா நகர்’ என்று அழைக்கப்படுகிறது. நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச் சிறிய கோபுர சிற்பக்கலைக்கூடமாக விளங்கும் கோவில் மாநகர் மதுரை ஆகும்.
  • ‘மதுரை’ என்னும் சொல்லுக்கு ‘இனிமை’ என்பது பொருள். மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லோரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழந்தனர். ‘தமிழ்கெழு கூடல்’ எனப் புறநானூறு போற்றியுள்ளது.
  • “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபினர் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று நல்லூர் நத்த்தனார் சிறுபானாற்றுப்படையில் பாடுகிறார்.
  • இளங்கோவடிகள் தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில்
ஓங்குசீர் மதுரை மதுரை மூதூர் மாநகர்
தென்தமிழ் நன்னாட்டுத்தீதுதீர் மதுரை மாண்புடை மரபின் மதுரை
வானவர் உறையும் மதுரை பதியெழவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்

எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்குப் புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார்.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”

என்னும் பரிபாடல் அடிகள் கூறுவது போலவே இன்றும் கோவிலும் தெருக்களும் அவ்வாறே காணப்படுகின்றன.

  • மதுரையை ‘கூடல்’ எனவும் ‘ஆலவாய்’ என்றும் அழைப்பர். ‘நான்மாடக்கூடல்’ என்னும பெயரே ‘கூடல்’ என மருவியது.
  • திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோயில்கள் சேர்ந்தமைந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.
  • கன்னிகோவில், கரியமால் கோவில், காளி கோவில், ஆலவாய்க் கோவில் ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்கு காவலாக அமைந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.
  • மதுரையை ‘கூடல்’ எனவும் ‘ஆலவாய்’ என்றும் அழைப்பர். ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயரே ‘கூடல்’ என மருவியது.
  • மதுரையை அழிக்க வருணன் 7 மேகங்களை அனுப்பினார். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக் கூடி மதுரையைக் காத்தமையால் ‘நான்மாடக்கூடல்’ என்னும்  பெயர் ஏற்பட்டதாக பரஞ்சோதியார் கூறுகிறார்.
  • எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடம் வளமான நகர் என்பதால் ‘கூடல்’ என்னும் பெயர் பெற்றது என்பர்.
  • சங்கம் வைத்து செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லோரும் கூடியதால் . ‘கூடல்’ எனவும்பட்டது.
  • மதுரையை விரிவுபடுத்த எண்ணி இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துக் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம்  எல்லை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாக தன் உடலை வளைத்து அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையே வகுத்துக் காட்டியது. மதுரைக்கு ‘ஆலவாய்’ என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.
  • ‘ஆலவாய்’ என்பது ‘ஆலத்தை (விடத்தை)’ உடைய ‘பாம்பினைக்’ குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்தால் ‘ஆலவாய்’ எனப்பட்டது.
  • தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர் மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.
  • மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் ‘மருதை’ என அழைக்கப்பெற்று, பின்னர் ‘மதுரை’ என்றானது. கல்வெட்டில் ‘மதிரை’ என்று பெயர் உள்ளது. சங்ககால மதுரை பூம்புனல் ஆறாகிய ‘வையை’ ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிரும், அதனைச் சுற்றி ஆழ்ந்த அகன்ற அகழியும் இருந்துள்ளன. யானைக் கூட்டங்கள் அகழிக்கு போவதற்கு ஏற்ற சுருங்கை (சுரங்க) வழியும் அமைந்திருந்தது.
  • சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் உள்ளன. அரண்மனை பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்ச்சாலைகள், நாளங்காடி, அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன.

மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள்

1. கணக்காயனார் மகனார் நக்கீரனார் 2. குமரனார்
3. நல்லந்துவனார் 4. மருதணிளநாகனார்
5. இளந்திருமாறன் 6. சீத்தலைச்சாத்தனார்
7. பெருங்கொல்லனார் 8. கண்ணகனார்
9. கதங்கண்ணகனார் 10. சேந்தம்பூதனார்

மதுரை வீதிகளின் பெயர்

அறுவை வீதி ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
கூல வீதி தானியக்கடை
பொன்வீதி பொற்கடைகள்
மன்னவர் வீதி மன்னர் வாழும் பகுதி
மறையவர் வீதி அந்தணர் வீதி

திருமலை நாயக்கரின் திருப்பணிகள்

  • இவர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். சிற்பங்கள் மிக்க புதுமண்டபத்தைக் கட்டினார். தமுக்கம், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக்குளம், கலைநயத்தில் தாஜ்மகாலையொத்த திருமலைநாயக்கர் மகாலையும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார். சித்திர திருவிழாவை சிறப்புற நடத்தினார். மதுரையை விழா மல்கு நகரமாக விளக்கமுறச்ச செய்தார்.
  • இராணி மங்கம்மாள் அமைத்த சத்திரங்களும், சாலைகளும் மதுரைக்குப் பெருமை சேர்ப்பன இன்றும் இருக்கின்றன.
  • சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப் பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச் சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.
  • பாண்டிய நாட்டை ஆண்ட மன்னருள் பலர், சிறந்த புலவர்களாகவும் விளங்கினார்கள். அவர்களுள் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், வரகுண பாண்டியன், அதிவீரராம பாண்டியன் முதலியோர் நற்காவலர்களாகவும் சிறந்த பாவலர்களாகவும் திகழ்ந்தார்கள். இத்திருக்கோவிலில் மீனாட்சியம்மையும் சொக்கநாதரும் அழகுற வீற்றிருந்து அருளுகின்றனர். கோவிலின் உள்ளே பெற்றாமைரைக் குளம் அமைந்து உள்ளது. இக்கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
  • பரஞ்சோதியாரின் திருவிளையாற்புராணம் தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் நாலடியார் இயற்றப்பெற்றது.
  • குமரகுருபரருக்கு, மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து, முத்துமணி மாலையைப் பரிசளித்தது முதலியன மதுரையில் நடைபெற்ற நிகழ்வாகும். வள்ளல் பாண்டித்துரை தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்தார். சிலப்பதிகார காப்பியத் தலைவரன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் ‘கோவலன் பொட்டல்’ என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.
  • மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்கு கோபுரம் : உயரமானது தெற்குக் கோபுரம். இது 160.9 அடி உயரமும் 1511 சுதை உருவங்களும் உடையது. இங்கு மீனாட்சியம்மையும், சொக்கநாதரும் அழகுற வீற்றிருந்து அருளுகின்றனர். உள்ளே பெறாற்றாமரைக்குளம் அமைந்துள்ளது. மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது. மதுரைநாயக்கர் மகால் இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.

தமிழகத்தின் சிறப்பை உணர்த்துவன

  • சேரநாடு வேழமுடைத்தது
  • சோழநாடு சோறுடைத்தது
  • பாண்டியநாடு முத்துடைத்தது
  • தொண்டைநாடு சான்றோர் உடைத்தது

அகரமுதலி, தேவநேயப் பாவணர், பாவலரேறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment