தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு – Tamilin Kaditha Ilakiyam – Natkuripu
கடிதம் என்பதற்கு மடல், முடங்கல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
செய்தியைச் சொல்லி அனுப்புவது தூது; எழுதி அனுப்புவது கடிதம்.
முற்காலத்தில் பனை ஓலையை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். அக்காலத்தில் பனை முதலியவற்றின் ஓலையை மடல் என்பர். மடலில் எழுதியது மடல் என்றே வழங்கப்பட்டது.
பண்டைய காலத்தில் செய்தியை ஒலையில் எழுதி மூங்கில் குழாயில் இட்டு அடைத்து அனுப்புவர். மூங்கில் குழாய்க்கு முடங்கல் என்று பெயர். எனவே அது கடிதத்தைக் குறிக்கப் பயன்பட்டது. முடங்கல் என்றால் கடிதம் என்றானது.
“கடி” என்ற சொல்லுக்கு விரைவு என்பதும் பொருள். ஆங்கிலேயர்கள் காலத்தில் அஞ்சல் முறை வந்தபின் விரைவாகச் சென்று சேர்ந்ததால் கடிதம் எனப்பட்டது.
எண்ணங்களை வண்ணமுற வடிப்பது கடிதம்.
தற்காப்புக் கடிதங்கள் (Personal and subjective Letter) தற்சார்பில்லாக் கடிதங்கள் Objective Letter) என இரு வகைப்படும்
தற்காப்பு கடிதங்கள் இருவருக்கிடையே உள்ள தனிப்பட்ட செய்திகளை உள்ளடக்கியது. அவ் இருவருக்கன்றி மற்றவருக்கு அவற்றால் பயன் இல்லை.
தற்சார்பு இல்லாக் கடிதங்கள் நாடு, மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற பொதுப்பொருள் பற்றியன. இவை எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பயன்படும்.
கருத்தைக் கட்டுரையாகத் தருவதை விடக் கடிதமாக எழுதினால் அதில் ஈடுபாடும் சுவையும் அதிகாமாகிறது. முன்னால் நின்று சொல்வதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
எழுத்தாளர்கள் இதனை ஓர் உத்தியாகக் கொண்டு கடிதங்கள் எழுதினர். அது “கடித இலக்கியம்” எனப்படுகிறது.
கடித இலக்கியத்தில் புகழ் பெற்றோர் :
ஆங்கிலம் :- வில்லியம் கூப்பர், கிரே, வால்போல், செஸ்டர் பீடு
லத்தீன் :- சிசரோ
ஜெர்மன் :- ஹில்லர்
பிரெஞ்சு :- மதாமெதெசெவிஞ்
நேரு தன்மகள் பிரியதர்சினிக்கு (இந்திரா) எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. “உலக வரலாறு” என்ற பெயரில் வெளிவந்தது.
விவேகானந்தர், காந்தியடிகள் எழுதிய கடிதங்களும் உள்ளன.
தமிழில் சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம் குறிப்பிடத்தக்கது. அவ்விருவருக்கும் உரிய தனிப்பட்ட கடிதம் என்றாலும் அது கோவலன் தந்தைக்கு எழுதியதைப் போன்றும் மிளிர்கிறது.
11-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள திருமுகப்பாசுரம், சிவபெருமான் சேரலன் என்ற மன்னனுக்குப் பாணபத்திரன் மூலம் கொடுத்தனுப்பிய கடிதமாகும்.
மறைமலையடிகள் எழுதி “கோகிலாம்பாள் கடிதம்” புனைகதையாகும்.
பாரதியார் பரலி.சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்கள், வ.உ.சி. கடிதங்கள், ரசிகமணி கடிதங்கள், புதுமைப்பித்தன் கடிதங்கள், தேவநேயப் பாவணர் கடிதங்கள் போன்றன உள்ளன.
அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என மு.வ. எழுதிய கடிதங்கள் வாழ்வியல் சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை கொண்டவை.
கடித இலக்கியத்திற்கு கால்கோள் செய்தவர் மு.வ. கட்டிடம் எழுப்பியவர் அண்ணா.
1 thought on “Tamilin Kaditha Ilakiyam – Natkuripu – தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்”
ஏழை மாணவனும் இதை பார்த்து படித்தறிந்து கொள்வான்.புத்தகம் கிடைக்காதவன் இந்த அருமையான கோப்புகளை பயன்படுத்திக்
கொள்வார்.தயவுகூர்ந்து அதை கோப்பு வடிவில் பரிசளிக்கலாமே ஐயா.அப்படி நிகழுமேயானால் இவ்வரையை நான் பரப்புவேன் என்னை போல் ஏழை மாணவனிடம்
ஏழை மாணவனும் இதை பார்த்து படித்தறிந்து கொள்வான்.புத்தகம் கிடைக்காதவன் இந்த அருமையான கோப்புகளை பயன்படுத்திக்
கொள்வார்.தயவுகூர்ந்து அதை கோப்பு வடிவில் பரிசளிக்கலாமே ஐயா.அப்படி நிகழுமேயானால் இவ்வரையை நான் பரப்புவேன் என்னை போல் ஏழை மாணவனிடம்