Tamilin Thonmai Matrum Sirappu, Thravidamozhigal – தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு, திராவிட மொழிகள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு, திராவிட மொழிகள் – Tamilin Thonmai Matrum Sirappu, Thravidamozhigal

TNPSC Tamil Notes - தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு, திராவிட மொழிகள் - Tamilin Thonmai Matrum Sirappu, Thravidamozhigal

Group 4 Exams – Details

தமிழின் தொன்மை

 • தமிழ்நாடு தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. முதல் மாந்தர் தோன்றிய இலெமுரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர். தமிழகம் இன்றுபோல் இல்லாது, குமரிமுனைக்குத் தெற்கே இன்று விரிந்தது. குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியை பின்வரும் சிலப்பதிகார பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும். “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்தக்குமரிக்கோடும் கொங்கோல் கொள்ள”
 • புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தமிழின் பழங்சிறப்பினைப் பெருமிதம் பொங்கப் பின்வருமாறு பாடுகிறார். “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”.
 • தமிழினம் தனக்குவமையில்லா ஒரு தனி இனம். தமிழர் நாகரிகம், தன்னிகரில்லா நனி நாகரிகம், தமிழர் உணவு, உடை, விருந்து, ஈககை, பொறை, நடுநிலைமை, அருள் ஆகிய பண்புகளால் சிறந்திருந்திருந்தனர். உழவையும், தொழிலையும் மதித்திருந்தனர். வினையே ஆடவருக்கு உயிராக கருதினர். “சான்றோனாதலே கல்வியின் முடிவெனப் போற்றினர். விருந்தெதிர் கொண்டு முனைந்தனர். பழியெனில் உலகைப் பெறவும் மறுத்தனர். ஈந்து உவந்து இன்பம் கண்டனர். இத்தகைய நாகரிகமும், பண்பாடும் மிக்கவராகத் தமிழர் வாழ்ந்தனர்.
 • வரலாற்றாசிரியர் பலரும் கிறத்துவ ஊழித் தொடக்கத்துக்கு முன்பே மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்திருக்க வேண்டும் என்று நவில்கின்றனர். தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச்செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்பது தனிநாயகம் அடிகளாரின் கூற்று. அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தமிழ்க்கெழு கூடல் என்று புறநானூறும் தமிழ்வேலி என்று பரிபாடலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினையே குறிக்கின்றன. “கூடலில் ஆய்ந்த ஒண்தீத் தமிழன்” என்று மணிவாசகமும் பழந்தமிழ்ச் சங்கத்தையும் சங்கமிருந்து தமிழாய்ந்தனையும் குறிப்பிடுகிறது. உலக நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினைத் தமிழ்மொழி அளித்திருக்கிறது. உலகில் உள்ள உயரிய மனித இனத்தில் மரபுச் செல்வமாகத் தமிழ் மொழி விளங்குகிறது.

திராவிட மொழிகள்

 • தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளங்குவது மொழி. உலகில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள், தனக்கெனத் தனிச்சிறப்பும், பல மொழிகள் தோன்றி வளர அடிப்படையாகவும் உள்ள மொழியே மூல மொழி. அதிலிருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் கிளை மொழிகள் அவற்றின் பொதுத்தன்மையின் அடிப்படையில் அவற்றை ஒரே மொழிக்குடுபம்த்தில் அடக்குவர் மொழியியல் அறிஞர்
 • இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் இந்தோ-ஆசிய மொழிகள், திராவிடமொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள் என மொழியியல் அறிஞர் நான்கு மொழிக் குடும்பங்களில் அடக்குவர். நம் நாட்டில் ஆயிரத்து முந்நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும், அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிச் சாலை” எனக் குறப்பிட்டுள்ளார் மொழியியல்  பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.
 • இன்று 23-க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. இம்மொழிகளைத் தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று வகையாகப் பிரிப்பர். இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகள் எனப்படும்.
 • உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ – ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கி.மு. 3000ஆண்டுகளுக்கு முன்னரே பரந்து விரிந்திருந்த இந்திய நாகரிகம் உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் தாயாகவும், வழிகாட்டியாகவும் விளங்கியிருக்கிறது. இவ்வாறு இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
 • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும். திராவிடம் என்னும் சொல் திராவிட நாடு எனும் பொருளைத் திருவது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல். தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரே திராவிடம் என்னும் சொல்லைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளர், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்றழைத்தனர்.
 • அவற்றுள் தமிழ் மிகுந்த சிறப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும் பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று. எனவே இவ்வின மொழிகள் அனைத்தையும் இணைத்துத் திராவிட எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகக் கால்டுவெல் கூறியுள்ளார். திராவிட எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகக் கால்டுவெல் கூறியுள்ளார். தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தைத் தமிழ் > தமிழா > தமிலா > டிரமிலா > ட்ரமிலா > த்ராவிடா > திராவிடா என்று விளக்குகின்றார்.

தமிழின் சிறப்பு

 • இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தமிழ்மொழி தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என ஒரு சாரரும், மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து திராவிட இனமும் அவர் தம் மொழியில் வந்திருக்க வேண்டும் என மற்றொரு சாராரும் கருதுகின்றன. ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழ்மொழி வழங்கி வருவதாக வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகிறார்க்ள.தமிழ்மொழியில் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையான நூல் தொல்காப்பியம். இந்நூல் ஓர் இலக்க நூலாகத் திகழ்வதால் இந்நூலுக்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.
 • திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மை திராவிட மொழி எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர். இம்மூலமொழியாக முதன் முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ். ஏனைய திராவிட மொழிகள் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ். இத்தகு தலைமைச் சிறப்பிற்குரிய தமிழ் மொழி.
 • தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனை வளம், கலை வளம், பண்பாட்டு வளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்ற மொழியே செவ்வியல் மொழி. இவையே செம்மொழிக்கான கூறுகளாக கருதப்படுகின்றன. மேற்கண்ட அளவுகோல்கள் கொண்டு நோக்கும் போது செவ்வியல் மொழியாக ஒளிர்வது நமது தாய்மொழியாம் தமிழே.
தென் திராவிட மொழிகள் நடுத் திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள்
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு (காெடகு), துளு, காேத்தா
தாேடா, காெரகா, இருளா
தெலுங்கு, கூயி, கூவி (குவி), காேண்டா, காேலாமி (காெலாமி),
நாய்க்கி, பெங்காே, மண்டா, பர்ஜி, கதபா, காேண்டி, காேயா
குரூக், மால்தாே, பிராகுய் (பிராகுயி)
 • வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர் மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாய்ந்த வளம்மிக்க மொழி காலத்தால் மூத்த தமிழ்மொழி தனித்தன்மையால் மிடுக்குற்றுடச் செம்மொழியாக திகழ்கிறது. திருந்திய பண்பும், சீர்திருத் நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம் என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
 • தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை,ஒண்மை, இன்மை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, மும்மை, இயன்மை, வியன்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி என்பார் பாவணர்.
 • உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழிநூலார். இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம் இவற்றுள்ளும் ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்று தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தீனும் ஈப்ருவும் வழக்கிழந்து போயின. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று.
 • மொழி நிலைத்து நிற்பதற்கு, அதன் பழைமையும் வளமையும் மட்டும் போதா, அம்மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாகா, பயிற்று மொழியாக, நீதிமன்ற மொழியாக நிலைபெற்றிடல் வேண்டும். இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல் வளம், வரலாற்றும் பிண்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பலவகைகளிலும் சிறப்பு பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்மொழிக்கு இவை அனைத்தும் பொருந்தும். செம்மொழிக்கான தகுதி கோட்பாடுகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபாவும், மொழி வல்லுனர்களும் வரையறுத்துள்ளனர்.
 • டாக்டர் கிரெளல் தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார்.
 • தமிழின் தொன்மை பற்றி தண்டியலங்கார நூல் “ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தமியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” என்கிறது. பெற்றோரை குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் குமரி நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் இல்லாத உலக பெருமொழி யாதென்றும் இல்லை என்பது மறக்க முடியாத உண்மை.
 • முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், அவன் பேசிய மொழி தமிழ்மொழியே என்கின்றனர் ஆய்வாளர். அக்குமரிக்கண்டத்தில் முதல் இடைத்தமிழ்சங்கங்கள் அமைத்துத் தமிழர் மொழியை வளர்த்தனர். இந்நிலபகுதி கடற்கோளால் கொள்ளப்பட்டதால், தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் தோற்றுவிக்கப்ட்டது. இது 3000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பர். உலகம் தோன்றிய போதே தோன்றி தமிழை. அதன் தொன்மையாக கருதி என்றுமுள தென்தமிழ் என்பார் கம்பர்
 • காலச்சூழலே மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. வடமொழியிலும் தமிழ், பிராகிருதம், பாலிச்சொற்கள் கலந்துள்ளன. தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நூல் வழக்குச் சொற்களும் கால வெள்ளத்தில் மறைந்து போயின எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்ப புதுச்சொற்களை புணைந்தும் பிறமொழித் துணையின்றிப் தமிழால் தனித்து இயங்க இயலும். இவ்வுண்மையை அறிந்தே “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறினார் கால்டுவெல்.
 • தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளுவம் முதலிய மொழிகளுக்கு தாய்மொழிகளாக திகழ்கிறது. அது பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல். 1090 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும், 180 மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்துள்ளது தமிழ். ஆதலால் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக திகழ்கிறது. தமிழ் என்பது பெருமைக்குரிய ஒன்று. இயல், இசை, நாடகம் என்னும் முப்பிரிவுகளை கொண்டது.
 • தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். திருக்குறள் மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது. உலகில் பேசப்படும் மொழிகளுள் தமிழின் பழமையோ அதன் பெருமையோ எம்மொழியும்-நெருங்கவியலாது. உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள். இவற்றின் மொத்த அடிகள் 26,350 அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவா உருவாக்கப்பட்ட இலக்கியங்கள். உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த கமில்சுவலபில் என்னும் செக் நாட்டு மொழியியல் பேரறிஞரின் முடிவு.
 • தமிழ் இலக்கணத்தை படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்றார் கெல்லட். நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியம். இஃது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகின்றது. தொல்காப்பியரின் ஆசிரியராக அகத்தியர் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதினார். முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்த முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூலகள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன.
 • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியர் நூற்பா. தமிழில் இடுகுறிப்பெயர்கள் மிகக்குறைவு. ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் எண்டு. வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன. தமிழல் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு. பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை. ஆனால் பிற மொழிகளில் இத்தகைய பகுப்பு முறை இல்லை.
 • பண்டைத் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் செய்யுள் வடிவிலே இருந்தன. கலிப்பா முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை. தொல்காப்பியர் கூறும் எழுத்துப்பிறப்பு முறைகள் மொழி நூலாரையே வியப்பில் ஆழ்த்துகின்றன.
 • “இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ ஒரு மொழிக்கு 33 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது. இதுவே மனித உணர்வுகள் அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்த போதுமானது என்பார் மொழிநூலார்.
 • யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமும் எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது. அது மக்கட் பண்பில்லாதவரை மரம் எனப்பழிக்கிறது. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் அறநெறியை உலகாள்வோர்க்கு உணர்த்துகிறது.
 • செம்மொழிக்கான 11 கோட்பாடுகளும் முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி  தமிழ்மொழி. இவ்வருஞ் சிற்ப்புமிக்க தமிழைச் செம்மொழி என அறிவித்தல் வேண்டும் என முயற்சி 1901-ல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது. நடுவணரசு 2004-ம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது.

 

பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment