தமிழ்விடு தூது – Muthollayiram
Group 4 Exams – Details
நூல் | தமிழ்விடு தூது |
பாவகை | கலிவெண்பா |
பாடல்களின் எண்ணிக்கை | 268 கண்ணிகள் |
பதிப்பு | உ.வே.சா. (1930) |
நூற்குறிப்பு
- தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
- இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
- “கலிவெண்பா”வால் இயற்றப்பட்டுள்ளது.
- இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
- 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
- இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை
- மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்மேல் காதல் கொண்ட ஒரு பெண் தமிழைத் தூது அனுப்பி மாலை வாங்குவதாகப் பாடப்பட்ட நூல்
- தமிழ்விடு தூது என்ற பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன
-
- ஆசிரியர் பெயர் தெரியா நூல்
- அமிர்தம் பிள்ளை எழுதிய தமிழ்விடு தூது
- ஆசிரியர் பெயர் தெரியா நூல் புகழ் பெற்றது.
மேற்கோள்
“அரியாசனம் உனக்கே யானால் உனக்கு
சரியாரும் உண்டோ தமிழே”
தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள் உண்ணப்படும் தேனே” |
வயலின் வரப்பு | நால்வகைப் பாக்கள் |
மடைகள் | பாவினம் |
ஏர்கள் | மனம், புத்தி, சித்தம், அகங்காரம் |
உழவர் | புலவர் |
விதைகள் | வைதருப்பம், கெளடம், பாஞ்சாலம், மாகதம் என்ற செய்யுள் நெறிகள் |
விளைபொருள் | அறம், பொருள், இன்பம் |
களைகள் | போலிப்புலவர் கூட்டம் |
களை எடுப்போர் | வில்லிபுத்தூரார், ஒட்டக்கூத்தர், அதிவீரராம பாண்டியர் எனத் தமிழ் உருவகப்படுத்தப்பட்டு உள்ளது. |
Related Links
Group 4 Model Questions – Download