தந்தை பெரியார் – Thanthai Periyar
பெயர் | தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி) |
பெற்றோர் | வெங்கடப்பர் – சின்னத்தாயம்மாள் |
காலம் | 17.09.1879 – 24.12.1973 |
- தந்தை பெரியார் “பகுத்தறிவாளர் சங்கத்தை ஏற்படுத்தினார். இளம் வயதிலேயே பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டரானார்.
- கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள் இறக்காமல் தடுப்பதற்காகத் தனது தோப்பிலிருந்த அனைத்துத் தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தார். மனித ஜாதி எனும் ஓரினமாக கொள்ள வேண்டும்.
- கேரளாவில் வைக்கம் எனும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்குத் தடை இருந்துது. இதில் வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
சிறப்பு பெயர்கள்
வெண்தாடி வேந்தர் | புத்துலகத் தொலைநோக்காளர் |
வைக்கம் வீரர் | தெற்காசியாவின் சாக்ரடீஸ் |
ஈரோட்டுச் சிங்கம் | பெண்ணினப் போர்முரசு |
சுயமரியாதைச் சுடர் | பகுத்தறிவுப் பகலவன் |
- “மேல் ஜாதி, கீழ் ஜாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லோருக்கும் கல்வி அவசியம். எல்லோரும் கல்வி பெற வேண்டும்”. ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களால் செய்ய முடியும்.
- “அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே, புதியவற்றை ஏற்க வேண்டும்” என்றார்.
- பெண்களுக்கு நகையோ, அழகான உடைகளோ முக்கியம் இல்லை. “அறிவும், சுயமரியாதையும் தான் மிக முக்கியம்” என்றார்.
- 1970-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
- பெண்கள் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு சென்னை மாநாட்டில் “பெரியார்” என்ற பட்டத்தை நவம்பர் 1938-ல் வழங்கினர்.
- நடுவண் அரசு 1978-ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
தாெண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு |
- நாட்டு விடுதலைக்குப் போராடிய பெரியார் பெண்களின் சமூக விடுதலைக்கும் போராடினார்.
- பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே. இது நாட்டு நடப்பை அறியவிடாமல் அவர்களின் அறிவை மறைக்குச் செய்வதாகும். நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும் மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும் விளையாது. பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால் முதலி அடுப்பங்கரையை விட்ட அவர்களை வெளியேற்ற வேண்டும். பெணகள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்று பெரியார் உறுதியாக எடுத்துரைத்தார்.
- “ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை. இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார் பெரியார்.
- பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
- ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று சிந்தித்தவர் பெரியார்.
- “பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல் மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக விளங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
- “பெண்களுக்கு சொத்துரைமை கொடுத்தாவிட்டான் அவர்களுக்கு இருக்கும் எல்லா வகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும். பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே முதன்மையான காரணம். ஆதலால் பெண்கள் தாராளமாகவும், துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக்கும் கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாத உடனடிச் செயலாகும் என்றார் பெரியார்.
- சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தார் பெரியார்.
- “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்” என்று பெரியார் நாப்பறை ஆர்த்தார். கணவனை இழந்தோர் மறுமணம் செய்து கொள்வதில் தீங்கில்லை என்றும் தெரிவித்தார்.
- பெரியோர் சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்; தொலைநோக்குப் பார்வையுடைவர்; பகுத்தறிவுக்குப் பொருந்தாதவற்றை அறுத்து எறிந்தவர்; சமூக மாற்றத்தை விரும்பியர்; பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர்.
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்