“பிரமிள்” என்ற பெயரில் எழுதிய “தருமு சிவராம்” இலங்கையில் பிறந்தவர்
இவரது காலம் 20.04.1939 – 06.01.1997
தமிழகத்து எழுத்தாளர்.
பாரதி, புதுமைபித்தனுக்கு பிறகு தோன்றிய ஒரு இலக்கியமேதை.
தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாளர், புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக கருதப்படுகிறார்.
இவர் “பானுசந்திரன், அரூப்சீவராம், பிரமிள்” போன்ற புனைப்பெயர்களில் எழுதினார்.
அடிக்கடி தன் பெயரை மாற்றிப் புதுபித்துக் கொண்டே இருந்தார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் “திருகோணமலையைச்” சேர்ந்தவர்.
எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்துவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார்.
எழுத்துலகில் சி.சு.செல்லப்பாவின் “கழுத்து” பத்திரிக்கையில் தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர்.
ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக் கட்டுரைகள் என விரித்த தளங்களில் இயங்கிய பிரமிள் “நவீன தமிழ் இலக்கியம் குறித்து கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும்” கொண்டவர்.
“ராமகிருஷ்ணமடம்” நடத்திய இரவுப் பாடச்சாலையில் ஆரம்பக் கல்வி மட்டும் கிடைத்தது.
“தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும்”. “உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்” என்று “சி.சு.செல்லப்பாவாலும்” பாடராட்பட்டவர்
பிரமிள் இளம் வயதிலேயே “மெளனியின் – கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
06.01.1997 – ல் காலமானார்
வேலுருக்கு அருகிலுள்ள கரைக்குடி என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.