தாயுமானவர் – Thayumanavar
பெயர் | தாயுமானவர் |
பிறப்பு | நாகப்பட்டினம், திருமறைக்காடு |
பெற்றோர் | கேடிலியப்பப்பிள்ளை – கெஜவல்லி |
காலம் | 1706-1744 |
- தாயுமானவர் விஜயரங்கநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக இருந்தவர்.
- இவர் பாடல்களுக்குத் தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்று பெயர்.
- இதில் 5 உட்பிரிவு 1452 பாடல்கள் உள்ளன.
- பாராபரக்கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக்கண்ணி, ஆனந்தக் களிப்பு, ஆகாரபுவனம் போன்ற இவர்தம் பாடற் தலைப்புகளில் சிலவாகும்.
- “கந்தர் அனபூதி சொன்ன எந்தை” அருணகிரிநாதரைப் பாராட்டியுள்ளார்.
- திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவர் திருவருளால் பிறந்தமையால் இவருக்கு “தாயுமானவர்” என்று பெயர் உருவானது. தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது. இவரது பாடல்கள் தமிழின் இனிமை, எளிமை பொருந்திய செய்யுளாக மனத்தூய்மை, பக்திச்சுவை ஊட்டுவதாக அமையப் பெற்றுள்ளது. இவரது பாடல் வரிகள்.
- எ.கா : “முத்தே! பவளமே! மொய்த்த பசும்பொற்சுடரே, சித்தே என்னுள்ளத் தெளிவே பாராபரமே”
மேற்கொள்
“நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய்ப் பாராபரமே””சும்மா இருப்பதே சுகம்” |
தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்