தேம்பாவணி
- தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர்
- தேம்பா + அணி, தேம்பா என்பதற்கு “வாடாத” என்றும் அணி என்பதற்கு “மாலை” என்றும் பொருள். ஆகத் தேம்பாவணி என்பதற்கு “வாடாத மாலை” என்று பொருள்.
- தேன் + பா + அணி, தேன் போன்ற பாக்களால் ஆன மாலை” என்றும் பொருள் கூறுவர்.
- 20ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் சமயச்சார்பானவை. இக்காப்பியமும் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்த நூல்.
- 3 காண்டங்களையும், 36 படலங்களையும் 3615 பாடல்களையும் கொண்ட நூல்
- இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராக கொண்ட பாடப்பட்ட நூல்
- சூசையப்பர் வரலாறு, அன்னை இறைமகன் பங்கு, பழைய, புதிய ஏற்பாட்டு வரலாற்று நிகழ்வுகள் இதன் அடிப்படையாகும்.
- காப்பியத்தின் இலக்கணத்தை கூறும் தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல் காப்பியத்தில் அமையும் கிளைக்கதைகள் பற்றி ஏதும் கூறுவில்லை. இதில் ஏறக்குறைய 40 கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.
- இல்லற வாழ்க்கையைவிடத் துறவற வாழ்க்கையை வலியுறுத்துகிறது.
- காப்பியத் தலைவரையே தூது செல்பவராகக் காட்டியிருப்பது இதன் புதுமை
- காப்பியத் தலைவன் மண்ணுலகில் முடிசூட்டிக் கொண்டு வாழந்து முடித்துப் பின் விண்ணுலுகு செல்வான். இதன் கதைத் தலைவருக்கு முதலில் விண்ணுலகில் முடிசூட்டப்படுகிறது. பின் மண்ணுலகிலும் ஒர மன்னன் முடிசூட்டுகிறான்.
- இறைவனின் முழு உருவ வழிபாட்டை ஏற்கிறது. “வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி”, “கைகூப்பிக் கூறலுற்றான்” போன்ற தொடர்கள் இது தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட நூல் என்பதை உணர்த்துகிறது.
- கிறிஸ்தவ கலைக்களஞ்சியமாக திகழும் நூல்
- இதன் சொற்களும், தொடர்களும், பொருள் போக்கும் தமிழ்ப்புலவர்ககும் கடினமான ஒன்றாக இருக்கிறது.
- தமிழ் கற்பித்த ஆசிரியர் – சுப்ரதீக் கவிராயர்.
- தொன்னூல் விளக்கம் – ஐந்திலக்கண நூல் (குட்டித் தொல்காப்பியம்)
- தமிழ் அகராதியின் தந்தை – வீரமாமுனிவர்.
- சின்னச்சீறா – பனு அகமது மரைக்காயர் (2145 பாடல்கள்)
- தமிழின் முதல் அகராதி – சதுரகராதி (பெயர், பொருள், தொகை, தொடை)
- தமிழின் முதல் ஏளன நூல் – பரமாத் குருகதை
மேற்கோள்கள்
“நகைசெய் தன்மையின் அமபெழீஇ தாய்துகள்
பகைசெய் நெஞ்சமும் பற்றலும் ஒன்றுற முகைசெய் மேனி தழுவி முத்திட்டலும் குகைசெய் இன்பெழக் கோலமிட்டு ஒத்ததே”
இது அன்னை மரியாள் குழந்தை இயேசுவுக்கு முத்தமிட்ட காட்சியைக் கூறுகிறது |
Sir current affairs notes anuppunga sir plz 🙏