திரைப்படக்கலை – Thiraipadakalai
Group 4 Exams – Details
- கலை நம் வாழ்வின் உயிர் நாடி. கலையில்லையேல் வாழ்வில் சுவை இருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் உலக மொழி திரைப்படம்.
- ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830-ம் ஆண்டு கண்டுபிடித்த பின்னர் எட்வர்டு மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஒடும் குதிரையை இயக்க படமாக எடுத்து வெற்றி பெற்றார்.
- ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார்.
- எடிசன் ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை கண்டுபிடித்தார்.
- பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894-ல் ரிச்மண்ட் என்னமிடத்தல் இடத்தில் இயக்கப்படத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்.
- புதிய படவீழ்த்திகள் உருவாக இவரடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன. ஊமைப்படங்களை பேசும் படங்களாக மாற்றுவதற்கு் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால் திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்துக்குரிய கதையுடன் கதை மாந்தர் தேர்வு செய்யப்பட்டனர்
- கதை, உரையாடல், பாடல் முதலியன் முதலில் ஆயத்தம் செய்ப்பட்டன. பின்னர் திரைப்பட நடிகர், நடிகையர்களுக்கு ஏற்ற உடைகள் வடிவமைக்கப்பட்டன. திரைப்படி நடிகர், நடிகையர் அவர்களுக்குத் தோழர், தோழியர், பணியாளர்கள் என துணை நடிகர் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
- கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்தப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்பபடங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது. செய்திப்படங்கள் உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டும்.
- திரைப்படம் ஒளிப்பதிவு செய்யப் படப்பிடிப்புக் கருவி இன்றியமையாதது. படிப்பிடிப்பின் போது படப்பிடிப்புக் கருவி அசைந்தால் படம் தெளிவாக இராது. அதனால் உயரமான இடத்தில் அக்கருவியைப் பொருத்தி விடுவர். சிலர் படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு. படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் பதினொரு படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
- ஒளி ஒலிபடக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது. திரைப்பபட இயந்திரங்களில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுவதானால், திரைத்துறை வளர்ச்சியும் செழுமையும் பெற்றுத் திகழ்கிறது. பல காலங்களில் பல்லரது உழைப்பினாலும் புதியன காணும் விருப்பத்தினாலும் மேன்மை பெற்றுத் திகழ்கிறது இன்றைய திரைத்துறை.
- கருத்தப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்டிஸ்னி” என்பவர் ஆவார். அவர் ஓவியர், ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரைவார், ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறுவனவாக இருக்கும். இப்படங்களை அடுக்கி வைத்துவிட்டு மிக வேகமாக ஏடுகளை புரட்டினால் அது வெவ்வேறு படங்களாக தெரியாமல் ஒரே நிகழ்வாகத் தோன்றும். இந்த இயங்குரு படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்புவர். மக்களைத் தன்பால் ஈர்த்துகட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. திரை உலகம் “கல்லார்க்கம் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே எனும் வரிகள் திரைப்படத்திற்கும் பொருந்தும்.
Related Links
Group 4 Model Questions – Download