Thirikadugam – திரிகடுகம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

திரிகடுகம்

TNPSC Tamil Notes - Thirikadugam - திரிகடுகம்

இம்மூன்றும் (அ) இம்மூவர் என வருவதே சிறப்பு

நூற்குறிப்பு

  • திரிகடுகம் பதினெண்கீழ்கணக்கு நூல்களள் ஒன்று
  • இந்நூல் 100 வெண்பாக்களை உடையது.
  • சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம். இம்மருந்தை உண்ட மனிதர்களின் உடல் நோய் நீங்கும்.
  • இதைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம் பெற்றுள்ள மூன்று கருத்துகளும் மக்களின் மனமயக்கத்தை போக்கித் தெளிவை அளிக்கும்.

ஆசிரியர் குறிப்பு

  • திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
  • திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
  • இவரை செருஅடுதோள் நல்லாதான் எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரனாய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • சமயம் – வைணவம்.

நூல் பயன்

  • திரிகடுகம் பாடலிலுள்ள மூன்று அறக்கருத்துகள் கற்பாேரின் மனத்திலுள்ள அறியாமையை நோயை போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காக சமுதாயத்தில் திகழச் செய்யும்.

பாவகை

  • 100 வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூலாகும்.

சிறந்த தொடர்கள்

  • நல்லவை செய்வாள் பெய்யெனப் பெய்யும் மழை
  • மக்கட் பெறலின் மனைக் கிழத்தி
  • பெண்ணிற்கு அணிகலன் நாணுடைமை
  • நெஞ்சம்அடங்குதல் வீடாகும்
  • தோள்பற்றிச் சாயினும் சான்றாண்ம குன்றாமை

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment