திரு.வி.கல்யாண சுந்தரனார் – Thiru.V.Kalyanasundaranar
Group 4 Exams – Details
அறிஞர் | திரு.வி.கல்யாண சுந்தரனார் |
பெற்றோர் | விருத்தாசலனார் – சின்னம்மையார் |
காலம் | 26.08.1883 – 17.09.1953 |
பிறப்பு | காஞ்சிபுரம் அருகில் உள்ள தண்டலம் |
சிறப்பு பெயர் | தமிழ்த்தென்றல் |
- திருவாரூர் விருத்தாச்சலனார் மகனார் கலியாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க ( திரு.வி.கல்யாண சுந்தரனார்) ஆகும்
- இவரது பெற்றோர் விருத்தாசலனார் – சின்னம்மையார்
- இவரது காலம் 26.08.1883 – 17.09.1953. இவர் பிறந்த ஊர் காஞ்சிபுரம் அருகில் உள்ள துள்ளம் (தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது.
- திரு என்பது திருவாரூரைக் குறிக்கும் சிறப்படையன்று
- ஆசிரியர் கதிவேற் பிள்ளை
- ஆசிரியராக இருந்த இதழ் தேசப்பக்தன்.
- நடத்திய இதழ் நவசக்தி
- திரு.வி.க நடை என்று சிறப்பிக்கும் அளவிற்கு சிறந்த எழுத்து நடை கொண்டவர்.
- பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர். மேடை தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்
- இவரின் தமிழ் நடையைப் போற்றி “தமிழ்த்தென்றல்” எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
- சென்னை இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி பள்ளியில் படித்தார். உடல்நலக்குறைவினால் அவரது இறுதித்தேர்வு எழுத முடியவில்லை. ஆயினம் கதிரை வேலர் என்பவரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்து தமிழ்ப்பணி ஆற்றினார்.
- எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை முழு மூச்சாகக் கொண்டு வடமொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழிலேயே எழுதவும் பேசவும் வேண்டும் என வலியுறுத்தினார். அதை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார். காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடை உரையை மொழி பெயர்த்தவர் ஆவார்.
- அவருக்கு வாய்த்த மொழிநடை, மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பாராட்டி உள்ளார். அவர் எழுதிய மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம், இமயமலை அல்லது தியானம் முதலிய நூல்கள் அவரது கற்பனைத்திறனையும், சீர்திருத்த ஈடுபாட்டையும் உயர்ந்த நடையையும் வெளிக்காட்டுகின்றன.
- முருகன் அல்லது அழகு, சைவத்துறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும், தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள், திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வரும், நாயன்மார் வரலாறு, இந்தியாவும் விடுதலையும்,தமிழ்சோலை, உள்ளொளி என்பன இவர் இயற்றிய இன்ன பிற உரைநடை நூல்கள். உரைநடை எழுதுவது எனது தொழில் என்று உரைநடைக்கு அவர் மதிப்புக் கொடுத்தார்.
- பெரியபுராணக் குறிப்புரை, திருக்குறள் முதல் 10 அதிகாரங்களுக்கு விளக்கவுரை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் முதலான நூல்களின் மூலம் இவரது உரைநடையின் மேன்மை விளங்கும்.
- முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், கிறித்துவின் அருள் வேட்டல், அருகன் அருகே, உரிமை வேட்டல், பொதுமை வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும் ஆகியன இவரது செய்யுள் நூல்கள்.
- தேசபக்தன், நவசக்தி எனும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றத்திற்கு பெரும்பாடுபட்டவர். அதற்காகத் தமது ஆசிரியர் பணியையும் துறந்தார். தமது வீறு கொண்ட தமிழ் முழக்கத்தால், சிதறிக் கிடந்த தொழிலாளர்களை ஒன்றிணைத்துத் தொழிலாளர் இயக்கம் கண்டார்.
- திரு.வி.க. எழுபது வயதில் வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல் எனும் நூலை மு.வரதராசனாரின் உதவியுடன் வெளியிட்டார். மணமுடித்த ஆறே ஆண்டுகளில் தனது துணைவியரான கமலாம்பிகை அம்மையாரை இழந்தவர் ஆயினும் “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” எனக்கூறிய திரு.வி.க. 1953 ஆம் அண்டு செம்டம்பர் திங்கள் 17-ம் நாள் தமது 71 வயதில் தமிழ் மூச்சுக்கு விடை தந்தார்.
தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு, திராவிட மொழிகள்