Thirukurala Kuravanchi – திருக்குற்றால குறவஞ்சி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

திருக்குற்றால குறவஞ்சி – Thirukurala Kuravanchi

TNPSC Tamil Notes - Thirukurala Kuravanchi - திருக்குற்றால குறவஞ்சி

நூல் திருக்குற்றால குறவஞ்சி
ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர்
சமயம் சைவம்

நூற்குறிப்பு

  • குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக இலக்கிய வடிவமாகும்.
  • சிற்றிலக்கிய வகைகளின் ஒன்று.
  • பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல் கொள்ள, குறவர் குலத்தை சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்கு குறிகூறப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது.
  • மேலகரத்தில் பிறந்த திரிகூட ராசப்பக்கவிராயர் இதன் ஆசிரியர்
  • “திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்” என்ற பட்டப்பெயர் பெற்றவர்.
  • திருகூட ராசப்பக் கவிராயரின் “கவிதைக் கீரிடம்” என்று போற்றப்பட்டது.
  • குறவஞ்சி நாடகம், குறத்தி பாட்டு என்ற பெயரும் உண்டு.
  • முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் குற்றாலநாதர் (சிவன்) முன்பு அரங்கேற்றப்பட்டது.
  • இது அகநூலாக இருப்பினும் தலைவன் தலைவியின் பெயர்களைக் கூறுகிறது.
  • “கடவுள்மாட்டு மானிடப் பெண்கள் நயந்த பக்கம்” என்பதற்குச் சான்றாகத் திகழும் நூல்.
  • கட்டினும் கழங்கினும் – என்பதன் அடிப்படையில் தோன்றியது.
  • திரிகூடநாதர் பவனிவருதல் – வசந்தவல்லி பந்தாடுதல் – வசந்தவல்லி சிவனைக் கண்டு காதல் கொள்ளதல் – வசந்தவல்லியின் கால் துன்பம் – குறத்தி (சிங்கி) வருதல், மலைவளம் கூறுதல் – வசந்தவல்லிக்கு குறி சொல்லதல் – வசந்தவல்லியின் மகிழ்ச்சி – குறவன் (சிங்கன்) குறத்தியைத் தேடிவருதல் – இருவரும் சந்தித்தல் எனக் கதை செல்கிறது,
  • முதல் குறவஞ்சி நூல். இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்தது.
  • பல வகைப் பாக்களும், பாவினங்களும் கலந்த நூல்
  • இனிய ஓசை நயமும் சிறந்த கற்பனையும் உடைய நூல்

மேற்கோள்

“ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து”

 – எனக் குற்றாலத்தின் சிறப்புக் கூறப்படுகிறது.

“வானரங்கள் கனிகொடுத்த மந்தியொடு கொஞ்சம்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

– எனக் குற்றால மலைவளம் கூறப்படுகிறது.

“செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம்செயம் என்றாட

இடை சங்கதம் என்று சிலம்புபுலம்பொட தண்டை கலந்தாட”

– என வசந்தவல்லி பந்தாடிய சிறப்புக் கூறப்படுகிறது.

“அஞ்சுதலைக்குள் ஆறுதலை வைத்தார் எனது மனத்தின்

அஞ்சுதலுக்கு ஓர் ஆறுதலை வையார்”

– எனச் சொல்லழகு கொண்டுள்ளது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

– குற்றாலக் குறவஞ்சி

  • தமிழரசி குறவஞ்சி – வரதநஞ்சையப்ப பிள்ளை
  • வேதநாயக சாஸ்திரி – பெத்தலகமே குறவஞ்சி

 

சீறாப்புராணம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment