சீர்காழியிலே அந்தணர் மரபில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகவாய்த் தோன்றினார்.
இவர் “ஆளுடையபிள்ளை” என்றும் “காழிவள்ளல்” என்றும் அழைக்கப் பெறுவர்.
இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தரானார்.
தமிழ்நாட்டின் பல தலங்களுக்கும் சென்ற இவர் இறுதியில் திருப்பெருமண நல்லூரில் தன் பதினாறாவது வயதில் மணக்கோலத்துடன் இறைவனுடன் கலந்தார்
சைவ சமயம் இந்நாட்டில் மீண்டும் தழைக்கப் பாடுபட்டவர்
“வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” வந்த இவர் “வேத வேள்விளை நிந்தனை செய்துழல்பவர்களை” வாதில் வென்றார்
பெரியபுராணம் “பிள்ளைபாதி; புராணம் பாதி” என்று இவருடைய வரலாற்றிற்கே சீரிய இடம் தருகிறது
நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டினைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குக் கொணர்ந்தார்.
கூன்பாண்டியன் என்றழைக்கப்படும் அப்பாண்டியரின் மனைவி மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறை யாரும் சிறந்த சிவபக்தர்கள். இந்நிகழ்ச்சியால் அரசியல் செல்வாக்குச் சைவ சமயத்திற்குக் கிட்டிற்று; சமயமும் வளர்ந்தது
ஆதிசங்கரர் இவரைத் “திராவிடத் சிசு” என்பர்.
“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்ற புகழந்தவர் சுந்தரர்
“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர்” என்று புழந்தவர் சேக்கிழார்
7 கோள்களைப் பற்றி பாடியவர்
இவர் இயற்றிய 384 பதிகங்களில் இயற்கை வருணனையும் தத்துவக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.