திருவிளையாடற்புராணம்
- புராணம் – பழைய வரலாறு. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம்.
- மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன.
- இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது. பெரிய புராணத்திற்கு அடுத்ததாகப் பெருமை பெற்று விளங்குவது. இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்தையும், வடமொழி நூலாகிய “ஆலாசிய மாகாத்துமியம்” என்னும் நூலையும் தழுவி எழுதப்பட்டது என்பர். 3 காண்டம், 64 படலம், 3363 பாடல்கள்
- தொடை நயமும், பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையெழுதியுள்ளார்
மேற்கோள்கள்
“இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்” |
“தன்பால் ஆகிய குற்றம் தேரான்” |
“ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக் காய்ந்த
நாவலன் இம்மெனத் திரவுருக் கரந்தான்”. |