திருமூலர் – Tirumular
Group 4 Exams – Details
- பன்னிரு திருமுறையில் பத்தாவது திருமுறையாகத் திகழும் சிறப்புடைய நூல் திருமந்ததிரம்.
- இது ஒன்பது தந்திரங்களை உடையது. ஒவ்வொரு தந்திரமும் பல அதிகாரங்களைக் கொண்டது. இதில் மொத்தம் 3000 பாடல்கள் உள்ளன.
- இதனை இயற்றியவர் திருமூலர்.
- நாயன்மார்கள் எல்லாரினும் காலத்தால் முற்பட்டவர் இவரே. இவர் ஒரு பெருஞ்சித்தர். நந்திதேவரின் மாணவர்.
- திருவாவடு துறைக்கோவிலில் உள்ள அரசமரத்தடியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு யோகத்தில் அமர்ந்திருந்தார் என்றும் ஆண்டுகளுக்கு ஒருமுறை விழித்து ஒவ்வொரு மந்திரமாக 3000 மந்திரங்கள் அருளினார் என்றும் கூறுவார்.
- திருமந்திரமே முதல் மந்திர நூலாகும். இதுவே பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூல்களுக்கு வேராக விளங்குகிறது.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாேர” என்ற பாடல் அன்பே சிவம், சிவமே அன்பு இரண்டும் ஒன்றே என்று கூறுகிறது. |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” ஆர்க்கும் இடுமின் அவரிவரி என்னன்மின்” உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலரால் கூறப்படும் உண்மைகள் அனைவரும் கடைப்பிடிப்பதற்குரிய அறிவுரைகளாகும். |
குறிப்பு :
- திருஞான சம்பந்தரர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்
- திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரையும் சமக்குரவர் என்று அழைப்பர்.