உமறுப்புலவர் – Umarpulavar
Group 4 Exams – Details
புலவர் | உமறுப்புலவர் |
பிறப்பு | தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் |
காலம் | கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் |
நூல்கள் | சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி, நொண்டி நாடகம், குருமாண வாழ்த்து |
ஆதரித்த வள்ளல்கள் | வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர் |
சீறாபுணத்தின் பாடல்களின் எண்ணிக்கை | 3 காண்டங்கள், 92 படலங்கள் |
- உமறுப்புலவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தவர். தந்தையார் செய்கு முகம்மது அலியார்
- உமறுப்புலவர் எட்டையாபுரம் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் கற்றார்.
- வாலைவாரிதி என்னும் வடநாட்டுப் புலவனை எட்டயபுரம் அரண்மனை வாதில் வென்றார்.
- எட்டையபுரம் அரசவைப் புலவராகவும் வாழ்ந்தார்.
- வள்ளல் சீதக்காதியன் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இக்காப்பியம் பாடினார்.
- நூல் முடியும் முன்பே வள்ளல் சீதக்காதி இறந்து விட்டதால் அபூல் காசிம் மரைக்காயர் ஆதரவில் இந்நூல் எழுதி முடிக்கப் பெற்றது
- சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி, நொண்டி நாடகம், குருமாண வாழ்த்து முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
நூற்குறிப்பு
- இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம்.
- “சீறா” என்பது “சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
- “சீறா” என்பதற்கு “வாழ்க்கை என்பது பொருள்.
- “புராணம்” என்பது பழைய வரலாறு.
- சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்
- அரபு மொழியில் அமைந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றை அடியொற்றி இச்சீறாப்புராணம் தமிழிலக்கிய மரபிற்கேற்ப எழுதப் பெற்றது.
- அண்ணல் நபிகள் நாயகத்தின் வாழ்வை அழகுறப்பாடும் இந்நூல் இஸ்லாமிய இலக்கியங்களுள் தலைச்சிறந்தாகக் கருதப்படுகின்றது.
- விலாத்துவக் காண்டம் நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜீறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களும் 92 படலங்களும் கொண்டது இந்நூல்
Related Links
Group 4 Model Questions – Download