உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் – Unave Marunthu – Noi Theerkum Mooligaigal
- மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு மக்கள் உண்ணும் உணவும், பழக்க வளக்கங்களும் அவர்களு உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்ககூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது. உண்டி முதற்றே உலகு என்பது நாமறிந்தது. உணவு, உடலுக்கு வலிமையைத் தருவது. வளர்ச்சியளிப்பது.
- பசிப்பிணி என்னும் பாவி என்றது மணிமேகலை காப்பியம் உண்டி கொடுத்தோர் உணவு கொடுத்தாேரே எனப் புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத போற்றி உணின்” (குறள் 942) மீதூண் விரும்பேல் எனக் கூறியவர் ஒளவையார். ஞானப்பச்சிலை என வள்ளாலார் போற்றும் இவ்விலை குரல் வளத்தை மேம்படுத்தும். கற்றாழைக்கு குமரி என்னும் வேறு பெயரும் உண்டு. கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்னும் வழக்கு ஏற்பட்டது.
மருந்தாகும் உணவுப் பொருட்கள்
மஞ்சள் | நெஞ்சு சளியை போக்கும் |
கொத்தமல்லி | பித்தத்தைப் போக்கும் |
சீரகம் | வயிற்றுச்சூட்டைத் தணிக்கும் |
மிளகு | தொண்டைக் கட்டை நீக்கும் |
பூண்டு | வளிய கற்றி வயிற்று அலைச்சலை நீக்கி பசியினை ஏற்படுத்தும் |
வெங்காயம் | குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியை தூய்மைப்படுத்தும் |
இஞ்சி | பித்தத்தை நீக்கி காய்ச்சலை போக்கும் |
தேங்காய் | நீர்கோவையை நீக்கும் |
கறிவேப்பிலை | உணவு உண்ணும் விருப்பத்தை தூண்டும் |
நல்லண்ணெய் | கண்குளிரச்சி, அறிவுத் தெளிவு தரும் |
கீரை | உடல் வலிமை தரும். கழிவை அகற்றும் |
எலுமிச்சை | குளிர்ச்சி தந்து பித்தம் போக்கும் |
அறுசுவையின் பயன்கள்
இனிப்பு – வளம் | கார்ப்பு – உணர்வு |
துவர்ப்பு – ஆற்றல் | உவர்ப்பு – தெளிவு |
கைப்பு – மென்மை | புளிப்பு – இனிமை |
“காலை மாலை உலவாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” – கவிமணி |
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்” – திருமூலர் |
- துளசி செடியின் இலைகளை நீரிலிட்டு கொதிக்கச் செய்து ஆவிபிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். இந்த இலைகளை எலுமிச்சை சாறுடன் அரைத்துப் போடப் படை நீங்கும். விதைகளை பொடி செய்து இரண்டு கிராம் அளவு உட்கொண்டால் உடற்சூடு மற்றும் நீர் எரிச்சல் அடங்கும்.
- மஞ்சள்காமாலைக்குக் கைகண்ட மருந்தாக இன்றும் பயன்பட்டு வருவது கீழ்க்காய் நெல்லி செடி ஆகும். இது கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி எனவும் குறிப்பிடுவர். சீறுநீர் தொடர்பான நோய்கள் நீக்குவதில் கீழாநெல்லி பெரும் பங்கு வகிக்கும். ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றும் தூதுவளை இலைகளை உணவோடு உண்டு வந்தால் சுவாசகாசம் அகலும். இதற்கு சிங்கவல்லி என்ற பெயரும் உண்டு. இது இளைப்பு, இருமலை போக்கும், குரல் வளத்தை மேம்படுத்தும். வாழ்நாளை நீடிக்கும்.
- குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடியாகும். இதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும். இலைகளுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசினால் சொறி, சிரங்கு நீங்கு. “மேனி துலங்க குப்பைமேனி” என்பது பழமொழி.
- வறண்ட நிலத் தாவரமான கற்றாழையில் பலவகையுண்டு. அவற்றுள் சோற்றுக் கற்றாழையே மருந்தாகப் பயன்டுகிறது. பசும்பாலுடன் சோற்றுக்கற்றாழை சேர்த்து பருகினால் மூலச்சூடு குறையும். கற்றாழைக்கு குமரி என்னும் வேறு பெயரும் உண்டு. கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்னும் வழக்கு ஏற்பட்டது.
- முருங்கைப்பட்டையை அரைத்துத் தடிவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும். உடலை வலுவாக்கும். இரும்பு சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் இதற்குப் பெரும் பங்குண்டு. கறிவேப்பிலையைக் கழுவிச் சிறிது சிறிதாக வாயில் போட்டு மென்று விழுங்கினால் சிதபேதி இரண்டு நாளில் குணமாகும். உணவில் சேரும் சிறுநச்சுத்தன்மையை முறிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.
- கரிசலாங்கண்ணியின் மருந்துப்பன் பெரியது. இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அது கண்பார்வையைத் தெளிவாக்கும். நரையை போக்கும். கரிசலாங்கண்ணிக்கு வேறுபெயர்கள் : கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்
- மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும். முசுமுசுக்கைக் கொடியின் வேரினைப் பசும்பாலில் ஊறவைத்து பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி, சர்க்கரையுடன் உண்டு வந்தால் இரும்மல் நீங்கும். வல்லாரை நினைவாற்றல் பெருக உதவும். வேப்பங்கொழுந்தினைக் காலையில் உண்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். வேப்பிலையை அரைத்துத் தடவினால் அம்மையால் வந்த வெப்பு நோய் அகலும். அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
Related Links
Group 4 Model Questions – Download