Uvamaiyal Vilakaperum Poruthamana Porul Therinthueluthuthal – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுல் – Uvamaiyal Vilakaperum Poruthamana Porul Therinthueluthuthal

TNPSC Tamil Notes - Uvamaiyal Vilakaperum Poruthamana Porul Therinthueluthuthal - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுல் 

Group 4 Exams – Details

இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேட்கப்படுகிறது. எனவே இப்பகுதிக்காக ஏராளமான உவவமைகளையும் அதற்குரிய பொருட்களையும் பட்டியலிட்டுள்ளோம்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல பொறுமை
நன்பால் கலந்தீமையால் திரிதல் போல் கெடுதல்
மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல மயங்குதல்
அடுத்தது காட்டும் பளிங்கு போல் வெளிப்படுத்தல்
அத்தி பூத்தாற்போல அரிய செயல்
அயடிற்ற மரம்போல் வீழ்தல்
இலவு காத்த கிளி போல ஏமாற்றம்
உடலும் உயிரும் போல ஒற்றுமை, நெருக்கம்
கல்மடை திறந்தாற்போல வெளியேறுதல்
பகலவனைக் கண்ட பணி போல நீங்குதல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவு
தாமரையிலைத் தண்ணீர் போல பற்றின்மை
பேடிகை வாளான்மை போலக்கெடும் முயற்சின்மை
ஒற்கத்தின் ஊற்றாம் துணை போல ஊன்றுகோல்
பொருபுலி புலியோடு சிலைத்த போல எதிரெதிரே நின்று போரிடல்
கடலில் கரைத்த காயம் போல் பயனற்றது
கொடுக்கும் தேளாய்க் கொட்டுவதேன் வருத்தம்
இடியோசை கேட்ட நாகம் போல நடுக்கம்
செந்தமிழும் சுவையும் போல ஒற்றுமை
தாயைக் கண்ட சேயைப் போல இன்பம், அதிக மகிழ்ச்சி
நகமும் சதையும் போல இணை பிரியாமை
மழை காணாப் பயிர் போல வாடுதல்
வேலியே பயிரை மேய்ந்தது பேல நயவஞ்சம்
அன்றலர்ந்த மலர் போல புத்துணர்வு
அனலில் விழுந்த புழுப்போல் வேதனை
கண்கட்டு வித்தை போல மாயத்திரை
பத்தரை மாற்றுத்தங்கம் போல பெருமை
நாயும் பூனையும் போல பகை
அலை ஓய்ந்த கடல் போல அமைதி
பசுமரத்தாணி போல் எளிதாகப் பதிதல்
குன்றின் மேலிட்ட விளக்கு போல பயனுடைமை / பயன்/ வெளிச்சம்
கனியிருப்பக் காய் கவரந்தது போல அறியாமை, தேவையற்ற செயல்
இலைமறைக் காய் போல் வெளிப்படுதல்
ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் துன்பம்
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல நாசம்
செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனின்மை
செந்தமிழும் சுவையும் பேல ஒற்றுமை
ஞாயிறு கண்ட தாமரை போல மகிழ்ச்சி
நீர்மேல் எழுத்து போல நிலையற்றது
பழம் நழுவி பாலில் விழந்தது போல இன்பமிகுதி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வருத்தம்
அனலிற் பட்ட மெழுகுபோல துன்பம் கண்டு உருகுதல்
குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வருவது போல் குறும்புகளில் ஈடுபடுவது
பொன்மலர் மணம் பெற்றது போல் பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது
உமி குற்றிக் கை சலித்தது போல் வருத்தம்
கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போல தவிப்பு
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல அத்துமீறல்
அச்சில் வார்த்தாற்போல ஒரே சீராக
அவலை நினைத்து உரலை இடித்தாற்போல கவனம்
ஆப்பறைந்த மரம் போல உறுதி
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல் ஏமாற்றுதல்
அரை கிணறு தாண்டியவன் போல ஆபத்து
ஆப்பசைத்த குரங்கு போல சிக்குதல்
ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் திட்டமிடாமை
இஞ்சி தின்ற குரங்கு போல் விழித்தல்
இடி விருந்த மரம் போல் வேதனை
இரும்பைக் கண்ட காந்தம் போல் கவர்ச்சி
உடும்புப் பிடி போல பிடிப்பு
உமையும், சிவனும் போல் நட்பு, நெருக்கம்
உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல் உறுதி
ஊமை கண்ட கனவு போல தவிப்பு, கூற இயலாமை
எள்ளில் எண்ணெய் போல் ஒளிந்திருத்தல், மறைவு
எட்டாப்பழம் புளித்தது போல் ஏமாற்றம்
ஏழை பெற்ற செல்வம் போல் மகிழ்ச்சி
ஒண்ட வந்த பிடாரி வளர்ப்பு பிடாரியை ஓட்டினாற்போல் விரட்டுதல்
கண் கெட்டபின் சூரிய நமஸ்கராம் போல காலம் தாமதித்து உணர்தல், வருமுன் காவாமை
கயிறற்ற பட்டம் போன்று தவித்தல், வேதனை
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது பிறரை ஏமாற்றுதல்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது கலக்கம், வருத்தம்
கானமயிலாட அது கண்டு ஆடம் வான்கோழி போல தாழ்வு, உயர்வின்மை
குடத்தில் இட்ட விளக்கு பேல இகழ்ச்சி, அடக்கம்
சிதறிய முத்து பேல பயனின்மை
காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் மேய்ந்தாற்போல வேகம்
சீரிய நாகம் போல் கோபம்
செல்லரித்த ஒலைபோல் பயனின்மை
நீரும் நெருப்பும் போல விலகுதல்
பாம்பின் வாய்த்தேரை போல மீளாமை
முக்காலம் உணர்ந்த முனிவர் போல அறிதல்
பாய்மரம் சாய்ந்தது போல விழுதல்
மரமேற்றின வண்டி போல் சுமை
பால் மணம் ஆறாத குழந்தை போல வெகுளி
புளியம் பழமும் தோடும் போல ஒற்றுமை
புற்றீசல் போல பெருகுதல்
மலரும் மணமும் போல ஒற்றுமை
வேம்பு அரசும் போல ஒற்றுமை
மேகம் கண்ட மணில் போல மகிழ்ச்சி, ஆனந்தம்
காட்டுத்தீ போல வேகமாக பரவுதல்
பற்று மரமில்லாக் கொடி போல ஆதரவின்மை, துன்பம்
கோலை எடுத்தால் குரங்கு போல் பயம்
சர்க்கரைப் பந்தலில் தேன் பொழிந்தாற்போல இன்பம்
சாயம் போன சேலை மதிப்பின்மை
சித்திரப் புதுமை போல அழகு
சிவபூஜையில் கரடி போல விருப்பமின்மை, தேவையற்ற வரவு
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல வேண்டாத வேலை, கேடு செய்தல்
சேற்றில் பிறந்த செந்தாமரை போல் உயர்வு, மேன்மை
சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போல திரும்பச் செய்தல் அறிவின்மை
திருடனைத் தேள் கொட்டியது போல சொல் முடியாத வேதனை
தோன்றி மறையும் வானவில்லைப் போல் நிலையற்ற, நிலையாமை
நத்தைக்குள் முத்துப்போல் உயர்வு, மேன்மை
நாண் அறுத்த வில் போல பயனற்றது
தொட்டனைத் தூறம் மணற்கேணி போல் அறிவு
நீருக்குள் பாசி போல் நட்பு
பசுத்தோல் போர்த்தி புலி போல் நயவஞ்சகம், ஏமாற்றுதல்
தாயைப் போல பிள்ளை தொடர்பு

எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment