வள்ளியம்மை – Valliammai
பெயர் | தில்லையாடி வள்ளியம்மை |
பிறப்பு | தென்னாப்பிரிக்கா – ஜோகன்ஸ்பேர்க் |
காலம் | 1898 – 1914 |
பெற்றோர் | முனுசாமி – மங்களம் |
- வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் 1898 ஆண்டு முனுசாமி – மங்களம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.
- இவரின் தாயாரான பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார். நெசவுத் தொழில் புரிந்த தில்லையாடி வள்ளியம்மை தந்தை முனுசாமி வேலை தேடி தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு குடியேறினார்.
- தென்னாப்பிரிக்காவில் திருமணப் பதிவு சட்டத்திற்கு எதிரான காந்தியடிகளின் வீரமான உரையைக் கேட்ட வள்ளியம்மை அறப்போராட்டதில் கலந்து கொண்டார்.
- 1913-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23-ம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார். அதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகி உயிருக்கு பேராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார். வள்ளியம்மை நிலை அறிந்த காந்தியடிகள் அவரைப் பார்க்க வந்தார். காந்தியடிகளிடம் “இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன்” என்று கூறினார்.
- இதைக்கேட்டு காந்தியடிகள் உள்ளம் நெகிழ்ந்தார். சிறைச்சூழலால் உடல்நலம் குன்றிய வள்ளியம்மை 1913 பிப்பரவரி 22ஆம் நாளன்று தமது 16ஆம் அகவையில் மரணம் அடைந்தார்.
- காந்தியடிகள் “இந்தியன் ஒப்பீனியன்” மற்றும் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்னும் நூலில் வள்ளியம்மை பற்றி நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார். தில்லையாடி வள்ளியம்மை நினைவைப் போற்றி இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. தில்லையாடி வள்ளியம்மை பெயரை கோ-ஆப்-டெக்ஸ் 600வது விற்பனை நிலையத்திற்கு பெயரிட்டு தமிழக அரசு சிறப்பித்துள்ளது.
Related Links
Group 4 Model Questions – Download