வண்ணதாசன் – Vannathasan
Group 4 Exams – Details
கவிஞர் | வண்ணதாசன் |
புனைப்பெயர் | கல்யாண்ஜி |
இயற்பெயர் | தி.கல்யாணசுந்தரம் |
விருது பெற்ற நூல் | ஒரு சிறு இசை (சாகித்திய அகாதெமி – 2016) |
- வண்ணதாசன் திருநெல்வேலியை பூர்வமாக கொண்டவர்.
- கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர்.
- இவர் தி.க.சிவசங்கரனின் மகனாவார்.
- இவரது சிறுகதைகளில் மென்மையும், அன்பும், பரிதவிப்பும், வாழக்கையின் நிலையாமையும், திருநெல்வேலி மக்களின் விழிம்பு நிலையும் காணப்படும்.
- பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
- “ஒரு சிறு இசை” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.
- இலக்கிய சிந்தனை விருது, 2016-ல் விஷ்ணுபுரம் விருது, 2018-ல் தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர்.
இவரின் சிறுகதை தொகுப்புகள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- கனிவு
- கிருஷ்ணன் வைத்த வீடு
- ஒளியிலே தெரிவது
- மனுஷா மனுஷா
- உயரப் பறத்தல்
Related Links
Group 4 Model Questions – Download